''அமைதி பேச்சுவார்த்தைக்கு வரசொல்லிட்டு, குண்டு போட்டுட்டு இருக்காங்க..'' - உக்ரைன் குற்றச்சாட்டு!
கிவி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது, இதனால் போரை கைவிட்டு சமாதானம் பேச வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்தன. இதை ஏற்று இரண்டு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை பெலாரசில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்டதால், போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் பேசுங்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், ''போரை நிறுத்தச் சொல்லி ரஷ்யாவிடம் சொல்லுங்கள்'' என சக நாடுகளைப் பார்த்து கேட்டுள்ளார் உக்ரைன் நாட்டின் தூதுவர் இகோர் போலிக்கா. முதல் கட்ட பேச்சுவார்த்தை நடக்கப்போகும் சூழலிலும் உக்ரைன் நகரின் மீது குண்டு மழை பொழிகிறது ரஷ்யா என்று இகோர் போலிக்கா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

உயிரிழப்புகள்
இகோர் மேலும் கூறுகையில், ''கடந்த ஐந்து நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், குண்டு வீச்சால் கிட்டத்தட்ட 16 குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். ரஷ்யாவில் ஏகப்பட்ட உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. 5000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் பலியாகி உள்ளார்கள். இந்த சூழ்நிலையில்தான் முதல் கட்ட அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

அகதிகள்
உக்ரைனில் தொடர்ந்து போர் நடந்து வருவதால், இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், உக்ரேனை விட்டு 7 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் நாட்டை விட்டு செல்லும் அவலநிலை ஏற்படும். ஏற்கெனவே உக்ரேனில் பலர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்'' என இகோர் போலிக்கா தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஒப்பந்தம்
ரஷ்யா போர் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தநிலையில், பல நாடுகள் முயற்சி செய்து அமைதி பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில் ரஷ்யா சொல்லும் நிபந்தனைகளுக்கு உக்ரைன் சம்மதிக்கும் பட்சத்தில், போர் உடனடியாக நிறுத்தப்படும். இல்லையென்றால் இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வரை ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications