For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வேளை சாப்பிட்ட நபருக்கு ரூ 1.3 கோடி பில்!.. வாட் மட்டுமே ரூ 6.5 லட்சம்.. அந்த ஒயின் ரேட்டு எப்பா!

Google Oneindia Tamil News

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ஒரு வேளை அசைவ உணவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் ரூ 1 .3 கோடி பணம் செலுத்தியுள்ளார். அந்த உணவுக்கான வாட் வரி மட்டும் ரூ 6.5 லட்சம் ஆகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துருக்கியை சேர்ந்த நுஸ்ரெட் கோக்சி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். சமையல் கலை வல்லுநரான இவருடைய உணவகத்தில் இவரால் தயாரிக்கப்படும் உணவுகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

ஒரு நபரின் ஒரு வேளை இரவு உணவுக்கு இந்திய மதிப்பில் ரூ 22 ஆயிரம் கொடுத்து உண்பதற்கு கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். துபாய் நாணய மதிப்பில் 1000 திராம்.

துருக்கியில் முதல் உணவகம்

துருக்கியில் முதல் உணவகம்

2010 ஆம் ஆண்டு துருக்கியில் தனது முதல் உணவகத்தை தொடங்கிய போது நுஸ்ரெட் அதிக லாபம் அடையாமல் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் வருமானத்தை பெருக்குவது எப்படி என யோசித்தவருக்கு தோன்றியதுதான் புதுமை எனும் வார்த்தை. எந்த தொழிலாக இருந்தாலும் அதில் தனித்துவம், புதுமை இவை இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பினார்.

 அசைவ உணவுகள்

அசைவ உணவுகள்

அதன்படி தங்கம் இழைத்த அசைவ உணவுகளை அவர் சமைக்கத் தொடங்கினார். அவரின் தொழில், கார்பரேட் முதலாளிகளை கவர்ந்தது. இதனால் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வந்தனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரிக்கவே நுஸ்ரெட்டின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இவரது உணவு சுவைக்காகவும் புதுமைக்காகவும் தனித்துவத்திற்காகவும் ரூ 1.3 கோடி மதிப்பில் வாடிக்கையாளர் ஒருவர் நுஸ்ரெட்டின் ஹோட்டலில் பணம் செலுத்தியுள்ளார்.

ஒரு வேளை உணவு

ஒரு வேளை உணவு

துபாய் கரென்சியில் 615,065 திராம். இந்த ஒரு வேளை உணவுக்கு மதிப்பு கூட்டு வரி எனப்படும் வாட் மட்டும் ரூ 6.5 லட்சம் வசூலிக்கப்பட்டது. உணவுக்கான ரசீதை நுஸ்ரெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ரசீதில் பெட்ரஸ் எனும் ஒயினுக்குத்தான் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது. 5 எண்ணிக்கை கொண்ட பெட்ரஸ், 2 எண்ணிக்கை கொண்ட பெட்ரெஸ் ஆகியவைதான் அந்த பில்லில் அதிகம் செலவாகியுள்ளது.

பெட்ரஸ் ஒயினின் தீங்கு

பெட்ரஸ் ஒயினின் தீங்கு

பெட்ரஸ் ஒயின் என்பது உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான ஒயினாகும். பிரென்ச் பிரைஸ்களுக்கு 45 டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்காக நெட்டிசன்கள் பலர் என்னாது பிரென்ச் பிரைஸுக்கு 45 டாலரா, உருளைக்கிழங்கை பூமியில் விளைவிக்கப்படாமல் ஆகாயத்திலா பயிர் வைக்கப்பட்டது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அந்த ரசீதில் பெரும்பாலான ஐட்டங்கள் ஆல்கஹாலாகவே இருக்கின்றன.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்

இன்ஸ்டாகிராம் போஸ்ட்

இந்த ரசீத்தை நுஸ்ரெட் தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தவுடன் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பலர் அவரை அன் ஃபாலோ செய்துவிட்டனர். பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கு உணவுக்காக ரூ 1.3 கேடி செலவிடப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. நுஸ்ரெட் துருக்கி நாட்டு சமையல் கலைஞராவார். மேலும் அந்த இன்ஸ்டா பதிவில் தரமான பொருட்களுக்கு விலை அதிகம் இல்லை என்றும் நுஸ்ரெட் பதிவு செய்துள்ளார்.

எடுபடுமா

எடுபடுமா

கடந்த ஆண்டு வரை துருக்கி, கிரீஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் நுஸ்ரெட்டுக்கு சொந்தமான ஹோட்டல்கள் உள்ளன. லண்டனில் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டதும் மக்களிடையே பல விதமான கருத்துகள் வந்தன. அது இந்த ஹோட்டல் அதன் விலை அதிகரிப்பாலும் ரசிகர்களிடையே எடுபடவில்லை.

English summary
Salt Bae restaurant charges Rs 1.3 crore bill to a customer and a tax for the bill was 6.5 lakhs Rupees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X