For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் அடுத்த இலக்கு ஐரோப்பா அல்லது அமெரிக்கா: சவுதி மன்னர் பகீர் தகவல்!!

By Mathi
Google Oneindia Tamil News

ஜெட்டா: ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்பின்போது சவுதி மன்னர் அப்துல்லா பேசியதாவது:

நாம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை புறக்கணித்தால், அவர்கள் அடுத்த மாதம் ஐரோப்பாவிற்கு குறி வைப்பார்கள். அதற்கு அடுத்து மாதம் அமெரிக்கா மீது.இலக்கு வைப்பார்கள்.

Saudi king warns of terror threat to the world

தீவிரவாததிற்கு எல்லைகள் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேயும் செல்லலாம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்க முடியாத பின்விளைவுகளை சந்திக்க நேரலாம்.

தலையை வெட்டி படுகொலை செய்யும் அவர்களது கொடூர குணம், மிகுந்த கண்டிப்பிற்குரியது. இது புதியதோர் செய்தி இல்லை. அவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டனர். இனி செய்வதற்கு ஏதும் இல்லை.

இதனை அனைத்து தலைவர்களும் ஏற்று, தீவிரவாததிற்கு எதிரான வேகமான உரிய நடவடிக்கைகளை தகுந்த சமயத்தில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

English summary
Saudi Arabia’s King Abdullah Bin Abdulaziz warned on Friday that the threat of terrorism will reach Europe and America if the world does not unite to confront it, Al Arabiya News Channel reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X