For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரேன் விபத்து எதிரொலி.... பின்லேடன் தம்பியின் கட்டுமான நிறுவனத்திற்கு சவுதி அரசு தடை

Google Oneindia Tamil News

மெக்கா: மெக்கா மசூதியில் கிரேன் விழுந்து 107 யாத்ரீகர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பின்லேடன் தம்பியின் கட்டுமான நிறுவனத்திற்கு தடை விதித்து சவுதி அரேபிய மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் புனித மெக்கா பெரிய மசூதியில் கடந்த வாரம் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் திடீரென உடைந்து விழுந்ததில் 11 இந்தியர்கள் உள்பட 107 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த விபத்தில் சுமார் 400 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தோருக்கு சவுதி அரேபிய மன்னர் சல்மான் நஷ்டஈடு அறிவித்துள்ளார்.

பின்லேடனின் தம்பி நிறுவனம்...

பின்லேடனின் தம்பி நிறுவனம்...

இதற்கிடையே, மசூதி விரிவாக்க கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ‘தி சவுதி பின்லாடின் குரூப்' நிறுவனம், அல்கொய்தா தலைவர் பின்லேடனின் தம்பி பகர் பின்லேடனுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இந்த நிறுவனத்தை நிறுவியர் பின்லேடனின் தந்தை ஆவார்.

கட்டுமான நிறுவனமே பொறுப்பு...

கட்டுமான நிறுவனமே பொறுப்பு...

மேலும், இந்த கிரேன் விபத்திற்கு அந்த கட்டுமான நிறுவனமே பொறுப்பு என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாததே இந்த விபத்திற்கு காரணம் என்றும் சவுதி அரசு கருதுகிறது.

தடை...

எனவே, இந்த நிறுவனம் புதிய வேலைகளை எடுத்து செய்ய சவுதி அரேபிய மன்னர் சல்மான் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தற்போது செய்து வரும் பணிகள் குறித்து மறு ஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2வது பெரிய கட்டுமான நிறுவனம்...

‘தி சவுதி பின்லாடின் குரூப்' உலகிலேயே மிகப் பெரிய 2வது கட்டுமான நிறுவனம் ஆகும். இது மிகப் பழமையான, பிரபலமான, முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும். 1931ம் ஆண்டு இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. ஷேக் முகம்மது பின்லேடன் சய்யீத் (பின் லேடனின் தந்தை) இதை நிறுவி்னார்.

ஜெட்டாவில் தலைமையிடம்...

ஜெட்டாவில் தலைமையிடம்...

சவுதி மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இதன் செயல்பாடுகள் உள்ளன. ஜெட்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இது செயல்பட்டு வருகிறது.

பிரமாண்ட கட்டிடங்கள்...

பிரமாண்ட கட்டிடங்கள்...

சவுதியில் உள்ள பல பிரமாண்ட கட்டடங்களைக் கட்டியது இந்த நிறுவனம்தான். ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை இவர்கள்தான் கட்டினர். அதேபோல கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தையும் இந்த நிறுவனம்தான் கட்டியது. இதேபோல செனகல் விமான நிலையம், ஷார்ஜா விமான நிலையம், ஷார்ஜா பல்கலைக்கழகக் கட்டடம் ஆகியுவற்றையும் இவர்கள்தான் கட்டினர்.

மெக்கா - மதீனா நெடுஞ்சாலை...

மெக்கா - மதீனா நெடுஞ்சாலை...

மெக்கா நகரை மறு சீரமைத்து புதுப்பித்துக் கட்டியது இந்த நிறுவனம்தான். மெக்கா - மதீனா நெடுஞ்சாலையும் இவர்கள் போட்டதுதான்.

English summary
Saudi Arabia suspended construction giant Saudi Binladin Group from new contracts on Tuesday following Friday's collapse of a crane in Mecca's Grand Mosque, which killed 107 people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X