இந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா.. அதிகரிக்கும் மரணங்கள்.. 1 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!
ஜகார்த்தா: இந்தோனேசியாவை கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா உயிரிழப்புகள் 1 லட்சத்தை கடந்து விட்டது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கொடுத்த அடியை யாரும் மறந்து விட முடியாது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் உயிரிழப்பு என்று சோக காட்சிகள் இருந்தன.இந்தியா பட்ட அதே நிலைமையைதான் இந்தோனேசியாவும் சந்தித்து வருகிறது.
ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ ஆரம்பித்தது.

அதிக கொரோனா பாதிப்பு
மார்ச் 2020 முதல் மட்டும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துள்ளது இந்தோனேசியா. மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. ஒரு புறம் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் திண்டாட, ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிக உயிரிழப்பு
இந்தோனேசியாவில் ஜூன் மாதத்தில் 7,914 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். அதே வேளையில் ஜூலை மாதத்தில் மட்டும் 30,100-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இது ஜூன் மாதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து, வீட்டில் சுய-தனிமைப்படுத்தலில் இருந்தவர்களில் போது 2,800-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

எண்ணிக்கை அதிகரிப்பு
மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இந்தோனேசியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,00,636 ஆக உயர்ந்துள்ளது.

மோசமான சாதனை
மே மாத இறுதியில் இந்தோனேசியா 50,000 உயிரிழப்புகளை தாண்டுவதற்கு 14 மாதங்கள் ஆனது. ஆனால் அடுத்த 50,000 உயிரிழப்புகளை வெறும் ஒன்பது வாரங்களில் எட்டி இந்தோனேசியா மோசமான சாதனையை படைத்துளளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தோனேசியா 1,747 புதிய உயிரிழப்புகளை பதிவு செய்து இருக்கிறது.

விழித்துக்கொள்ளும் அரசு
ஏராளமான உயிரிழப்புகளை கண்ட பிறகு இந்தோனேசியா அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசு தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரத்தை முடுக்கி விட்டது. நாட்டின் பெரும்பாலான தொழில்துறை ஆக்ஸிஜன் உற்பத்தியை மருத்துவ பயன்பாட்டிற்கு திருப்பி விட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தல் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications