வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு.. பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடித்த ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் அடுத்த பிரதமரை தோ்வு செய்ய பொதுத்தோ்தல் நடத்தப் பட்டது. தோ்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தோ்தலில் வாக்களிக்க 10 கோடி மக்கள் தகுதி பெற்றிருந்ததால் அதற்கு தகுந்த வகையில் 6 லட்சம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தேர்தல் வாக்குப்பதிவின் போது வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மோதல், வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. வாக்குப்பதிவின் போது அவாமி லீக் கட்சி மற்றும் தேசியவாத கட்சி ஆதரவாளா்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேரும், வன்முறையை தடுக்க காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேரும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவில்,இந்த தோ்தலிலும் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளார்.
வங்கதேசத்தை பொறுத்தவரையில், அங்குள்ள நாடாளுமன்றத்தில் மொத்தம் 300 இடங்கள் உள்ளன. ஹசீனா பெரும்பான்மையை பெறுவதற்கு 151 இடங்கள் வெற்றி பெறிருக்க வேண்டும். ஆனால் அவரது கட்சி 281 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications