இந்த 6 பேர் மட்டும் இன்று 16 முறை நியூ இயர் கொண்டாடுவார்கள்.. ஏன்? எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: விண்வெளியில் இருக்கும் 6 விண்வெளி வீரர்கள் மட்டும் இன்று 16 முறை புது வருடத்தை கொண்டாடுவார்கள் என்று கூறப்படுகிறது. நாசா செய்யும் ஒரு சோதனை முயற்சியின் காரணமாக அவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

வேறு ஒரு முக்கிய பணிக்காக விண்வெளிக்கு சென்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நாசா வீரர்கள் மட்டும் இல்லாமல் ரஷ்யா மற்றும் ஜப்பான் வீரர்களும் இதில் இருக்கிறார்கள்.

உலகத்திலேயே இவர்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு அமைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா

நாசா

விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த 6 வீரர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றார்கள்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்த 6 பேருக்கும் வித்தியாசமான வேலைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஆறு பேரின் உடலில் இரண்டு வார விண்வெளி பயணத்திற்கு பின்பு எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை கண்டுபிடிக்கவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ள படுகிறது. அதன்படி அவர்கள் விண்வெளியில் உடற்பயிற்சி செய்வார்கள். அதன்முலம் விண்வெளியில் எப்படி எல்லாம் உடல் மாற்றம் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியும்.

சுற்றுவார்கள்

சுற்றுவார்கள்

அதேபோல் இந்த ஆறு பேரும் இன்று காலையில் இருந்து பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றுவார்கள். இதன் காரணமாக இன்றில் இருந்து நாளை வரை மட்டும் இவர்களுக்கு 16 முறை சூரிய உதயம் ஏற்படும். எனவே இவர்களுக்கு கணக்குப்படி 16 முறை புதிய வருடம் பிறக்கும்.

சாதனை

சாதனை

உலகிலேயே இதுபோன்ற சாதனையை இதுவரை யாருமே செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6 பேர் மட்டுமே ஒரே நாளில் 16 சூரிய உதயத்தை பார்ப்பார்கள். அதேபோல் இவர்கள் மட்டுமே 16 முறை ஒரே நாளில் புது வருடம் கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Six astronauts in space will celebrate New Year for 16 times over and over in single day. They will round forth and back in single day for 16 times.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற