For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களிடம் சிஸ்டம் சரியில்லை.. வைரஸ் தாக்கிவிட்டது.. ஆப்பிள் ஒப்புதல் வாக்குமூலம்!

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன், கணினிகளை தொடர்ந்து ஆப்பிள் போனையும் ஸ்பெக்டர் வைரஸ் தாக்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்மார்ட்போன், கணினிகளை தாக்கும் வகையில் புதிய 2 வைரஸ்கள் உருவாகி இருப்பதாக கூறப்பட்டது. இந்த வைரஸ்களை எப்படி அழிப்பது என தெரியாமல் கூகுள் நிறுவனம் குழம்பிக் கொண்டு இருக்கிறது.

ஹாலிவுட் படங்களில் கடைசி நேரத்தில் வரும் டிவிஸ்ட் போல தற்போது இதில் ஒரு டிவிஸ்ட் உருவாகி இருக்கிறது. அதன்படி இந்த வைரஸ் முதலில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு பதிலாக ஆப்பிள் போனை தாக்கி இருக்கிறது.

இதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக் கொண்டு தனது இணையத்தில் இதுகுறித்து தகவல் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு

இரண்டு

இந்த இரண்டு வைரஸ்களும் செல்போன் மற்றும் கணினிகளை தாக்க கூடியது. முக்கியமாக இன்டெல் ரக புரோசஸர்கள், ஆண்ட்ராய்ட் போன்களை அதிகமாக தாக்க வழி இருக்கிறது. ஸ்பெக்டர் வைரஸ் மற்றும் மெல்ட் டவுன் வைரஸ் இரண்டும் வெவ்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆப்பிள் போன்

ஆப்பிள் போன்

யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இந்த வைரஸ்கள் இரண்டும் ஆப்பிள் போனை தாக்கி இருக்கிறது. இதில் நிறைய போன்களை ஸ்பெக்டர் வைரஸ் அதிகமாக தாக்கி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தனது வெப்சைட்டில் இது குறித்து எழுதி ஒப்புக் கொண்டு இருக்கிறது.

மாடல்கள்

எந்த மாடல் மொபைல் போன்களில் பாதிப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி எல்லா மாடல் ஐஓஎஸ் போன்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஐஓஎஸ் 11.2, மேக் ஐஓஎஸ் 10.13.0 மற்றும் டிவி ஓஎஸ் 11.2 ஆகிய அப்டேட்கள் மட்டுமே இந்த வைரஸ் எதிர்ப்புடன் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

என்ன செய்யலாம்

இந்த வைரஸ் தாக்குவதற்கு முன்பே செயல்பட்டால் மட்டுமே இதில் இருந்து தப்பிக்க முடியும். எனவே இப்போதே ஆப்பிள் மொபைல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஆப்பிள் பிரவுசரான சஃபாரியையும் அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Google says Two virus names Spectre and Meltdown will affect android and intel CPU in this year. Due to this the hardware of the phone and its working will affect. At the same time the working for the CPU will also get affect. After Android Spectre malware also affected Apple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X