நாளை மறுநாள் நியூசிலாந்தில் பொதுத் தேர்தல்.. இலங்கை தமிழர் போட்டி.. யார் அவர்?
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் பொதுத் தேர்தலில் தேசிய கட்சி சார்பில் இலங்கை தமிழர் இடம் பெற்றுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் மிகவும் இளம் வயதில் ஒரு நாட்டின் உயரிய பதவியை அடைந்த பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார், ஆனால் அவர் தனது பிரதமர் பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார். தனது 4 வயது மகளுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் 54 ஆவது பொதுத் தேர்தல் நாளை மறுநாள், அதாவது சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியை எதிர்த்து தேசிய கட்சி போட்டியிடுகிறது. இந்த இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை குறைவு என கூறப்படுகிறது. இருந்தாலும் சிறு கட்சிகளின் உதவியுடன் தேசிய கட்சி அடுத்த பிரதமராகும் வாய்ப்பை பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில் தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில் இலங்கையை சேர்நா்த பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளானந்தம் இடம்பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கட்டுமான திட்ட பணிகளில் ஆலோசகராக இருந்துள்ளார். இவர் இலங்கையின் யாழ் புனித ஜான் கல்லூரி மற்றும் கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரியில் பயின்றுள்ளார்.
தேசிய கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் லக்சான், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆகியோர் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள். இவர்களது வெற்றியானது சிறிய கட்சிகளின் ஆதரவை அடிப்படையாக கொண்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications