பாகிஸ்தானில் மாணவர் நிர்வாணமாக்கி அடித்துக் கொலை: பகீர் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெஷாவர்: பாகிஸ்தான் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடவுளை நிந்திக்கும் வகையான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறி அவரை நிர்வாணமாக்கி அடித்துக் கொலை செய்துள்ளது ஒரு கும்பல்.

பாகிஸ்தானின் மர்தான் நகரில் உள்ளது அப்துல் வாலி கான் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் மஷால் கான். அவர் கடவுளை நிந்திக்கும் வகையான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

Student stripped naked, beaten to death in Pakistan

இதையடுத்து ஒரு கும்பல் மஷால் கானை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நிர்வாணமாக்கி அடித்துக் கொலை செய்துள்ளது. அந்த கும்பல் அவரை தாக்கும்போது 10 மாணவர்கள் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டனர். மேலும் கானை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை.

மாறாக சக மாணவர்கள் கான் கொலை செய்யப்பட்டதை தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவரை அடித்துக் கொன்றதும் இல்லாமல் அவரின் உடலை எரிக்கத் துடித்துள்ளனர் சக மாணவர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A student was stripped naked and beaten to death at his university campus in Pakistan. He was accused of sharing some blasphemous content on social media.
Please Wait while comments are loading...