For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவர் கிரீன்.. சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்ட அதே நேரத்தில்.. சீனாவில் நடந்த "சம்பவம்".. ஏதோ இடிக்குதே!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சூயஸ் கால்வாயில் எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் சிக்கிய அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சீனாவிலும் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பலை வெற்றிகரமாக திருப்பி உள்ளனர். தரை தட்டிய கப்பலை கடந்த 5 நாள் போராட்டத்திற்கு பின் மீட்டு உள்ளனர்.

ஒருவாரமாக இங்கு போக்குவரத்து தடைபட்டாலும் இன்னும் முழுமையாக கப்பல்கள் இயக்கப்படவில்லை. சூயஸ் கால்வாயில் சில சீரமைப்பு பணிகளை செய்துவிட்டு இன்று மாலை கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.

லாரி

லாரி

இந்த எவர் கிரீன் நிறுவனத்தின் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயை மறைத்த அதே நேரம் சீனாவிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் நான்ஜிங் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் பிஸியான தேசிய சாலையில் எவர் கிரீன் நிறுவனத்தை சேர்ந்த லாரி இதேபோல் சிக்கியது.

சிக்கிய லாரி

சிக்கிய லாரி

சூயஸ் கால்வாயில் எப்படி எவர் கிரீன் நிறுவனத்தின் கப்பல் சிக்கியதோ அதேபோல்தான் இந்த எவர் கிரீன் நிறுவனத்தின் கண்டெயினர் லாரியும் சாலையில் சிக்கியது. இதில் கவனிக்க வேண்டியது அந்த சரக்கு கப்பல் போலவே இந்த லாரியும் குறுக்கு வெட்டாக திரும்பி சாலையை அடைத்து உள்ளது.

கப்பல்

கப்பல் போலவே இங்கும் கண்டெயினர் லாரியால் மிகப்பெரிய டிராபிக் ஏற்பட்டு இருந்தது. இந்த லாரியை 2-3 மணி நேர போராட்டத்திற்கு பின்தான் அகற்றினார்கள். இணையத்தில் இது தொடர்பாக மீம்கள் நிறைய வைரலாகி வருகிறது. அதிலும் லாரி, கப்பல் இரண்டும் பச்சை நிறத்தில் இருப்பது நிறைய சந்தேகத்தை தருவதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சந்தேகம்

சந்தேகம்

எப்படி ஒரே நிறத்தில் இரண்டு எவர் கிரீன் நிறுவனத்தின் கப்பலும், லாரியும் சிக்கும். கொஞ்சம் கூட புரியவில்லையே. இதை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். தொழில்நுட்ப கோளாறால் அந்த லாரி சீனாவின் சாலையில் பிரேக் டவுன் ஆனது குறிப்பிடத்தக்கது.

English summary
Suez Canal: An EverGreen truck blocks the road in China on the same week as Evergreen Ship blocks the canal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X