For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 லட்சம் டன்.. ராட்சச சரக்கு கப்பலை திடீரென திருப்பியது எப்படி?.. வழிவிட்ட இயற்கை.. சூட்சமம் இதுதான்

Google Oneindia Tamil News

எகிப்து: சூயஸ் கால்வாயில் சிக்கி இருந்த எவர் கிவன் கப்பல் எப்படி திருப்பப்பட்டது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.

எகிப்தில் இருக்கும் சூயஸ் கால்வாயில் 5 நாட்களுக்கு முன் எவர் கிவன் கப்பல் தரை தட்டியது. புயல் காற்றில் வேகமாக திரும்பிய 'எவர் கிவன்' கப்பல் இரண்டு பக்கமும் பக்கவாட்டாக திரும்பி, பாதையை அடைத்தது.

இந்த சரக்கு கப்பலை எப்படியாவது திருப்பி அதை மீட்க வேண்டும் என்று மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. கிட்டத்தட்ட 50+ இழுவை கப்பல்கள் மூலம் இந்த ராட்சச கப்பலை திருப்பும் பணிகள் நடந்து வந்தன..இந்த நிலையில் வெற்றி காரணமாக இன்று காலை கப்பல் மொத்தமாக திருப்பப்பட்டு அடைப்பு நீக்கப்பட்டது .

மனித கடத்தல்.. திட்டமிட்ட சதி.. சூயஸ் கால்வாய் அடைப்புக்கு பின் ஹிலாரி கிளிண்டனா?.. பின்னணி என்ன? மனித கடத்தல்.. திட்டமிட்ட சதி.. சூயஸ் கால்வாய் அடைப்புக்கு பின் ஹிலாரி கிளிண்டனா?.. பின்னணி என்ன?

எப்படி?

எப்படி?

இந்த கப்பல் எப்படி திருப்பப்பட்டது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த ராட்சச சரக்கு கப்பலின் எடை 2 லட்சம் டன். இதில் மொத்தம் 20 ஆயிரம் கண்டெயினர்கள் இருந்தன. மாமிசம் தொடங்கி மருந்துகள் வரை பல்வேறு வகையான பொருட்கள் கண்டெயினருக்குள் இருந்தது. இதனால் 2 லட்சம் டன் கொண்ட கப்பலை திருப்புவது சிரமமாக இருந்தது.

திட்டமா

திட்டமா

முதலில் இந்த கண்டெயினர்களை எடுத்துவிட்டு, கப்பலின் எடையை குறைத்துவிட்டு, பின் அதை திருப்பலாம் என்பதே திட்டம். ஆனால் அங்கு இருந்த கடல் அலையும், கப்பல் நின்ற விதமும் கண்டெயினர்களை நீக்க ஏற்றதாக இல்லை. இதனால் ஒரு சில கண்டெயினர்களை மட்டும் நீக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் அதிலும் நிறைய இடைஞ்சல்கள் இருந்தது.

எப்படி நீக்குவது ?

எப்படி நீக்குவது ?

குறுக்கு வெட்டாக நிற்கும் கப்பலில் இருந்து எப்படி கண்டெயினர்களை நீக்குவது? இன்னொரு பக்கம் கப்பலுக்கு கீழ் தேங்கி நின்ற 2 லட்சம் மணலை எடுக்க வேண்டும். இதை புல்டோசர் வைத்து நீக்கி வந்தனர். ஆனால் இதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இந்த மணலை நீக்க பல மாதம் ஆகும். இரண்டு பிளானும் தோல்வி அடைந்ததால் மூன்றாவதாக இழுவை கப்பல்களை வைத்து கப்பலை இழுத்தனர்.

இழுத்தனர்

இழுத்தனர்

மிகப்பெரிய இழுவை கப்பல்களை வரவழைத்து இந்த எவர் கிவன் கப்பலை இழுத்தனர். இதனால் கொஞ்சமாக நேற்று கப்பல் சில இன்ச்கள் நகர்ந்தது. இதனால் நம்பிக்கை பிறக்கவே கூடுதலாக இழுவை கப்பல்களை வரவழைத்து கப்பலை விடாமல் இழுத்தனர்.

அதிசயம்

அதிசயம்

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது . ஏற்கனவே மணல் நீக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் வேகமாக செல்ல தொடங்கியது. இதனால் கப்பலுக்கு கீழ், அதன் நகர்வுக்கு தடையாக இருந்த மணல் பகுதி கரைந்து செல்ல தொடங்கியது. இதுதான் சூழ்நிலையை மாற்றியது.

மாற்றம்

மாற்றம்

இது தரைதட்டிய கப்பலை லூசாக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக இழுவை கப்பல்கள் ஒரு பக்கம் சரக்கு கப்பலை திருப்ப இன்னொரு பக்கம் தண்ணீர் அங்கு இருந்த மணலை அடித்து சென்றது. இது கப்பலின் திருப்பத்தை மேலும் எளிமையாக்கியது.

சரியானது

சரியானது

இதனால் மிகவும் மெதுவாக திரும்பிய சூயஸ் கப்பல் வேகமாக திரும்ப தொடங்கியது. திடீரென தண்ணீர் அந்த கால்வாயில் வேகம் எடுத்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும்... இதன்பின் எல்லாம் எளிதாக கப்பல் வேக வேகமாக திரும்பி, அடைப்பு சரியானது. 5 நாட்களாக இந்த கப்பலை திருப்ப பெரும் போராட்டம் நடந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட மாற்றத்தால் இன்று காலை மொத்தமாக இந்த கப்பல் திருப்பப்பட்டுள்ளது.

English summary
Suez Canal: How Ever Given Cargo freed in all of sudden today? What really happened?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X