For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"லீக்" ஆகிடுச்சே ரகசியம்.. தோட்டத்தில் புதைத்ததை.. 9 வருஷம் கழித்து சொல்லும் தாலிபன்கள்.. என்னவாம்

9 வருடங்கள் கழித்து முல்லா உமர் நினைவிடம் தற்போது வெளியே தெரிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கன்கள் குறித்த ரகசிய தகவல் ஒன்று 9 வருடங்களுக்கு பிறகு, தற்போது தெரியவந்துள்ளது.. என்ன அது?

கடந்த வருடம், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்க தொடங்கிய உடனேயே, தாலிபான்கள் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..

அமெரிக்கப் படைகள் பின் வாங்கியதால், ஆப்கான் படை வீரர்கள் தாலிபான்களை சமாளிக்க முடியாமல் திணறியும் தோற்றும் போனார்கள்..

திமுக எம்.எல்.ஏ. எழிலனின் பொதுப் பட்டியலில் கல்வியை எதிர்த்து வழக்கு- மீண்டும் நாளை விசாரணை! திமுக எம்.எல்.ஏ. எழிலனின் பொதுப் பட்டியலில் கல்வியை எதிர்த்து வழக்கு- மீண்டும் நாளை விசாரணை!

அஷ்ரப் கனி

அஷ்ரப் கனி

இறுதியில், 20 வருடங்கள் கழித்து அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்.. அப்போது, அஷரப் கனியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தலிபான்கள் அட்டகாசத்தில் இறங்கிவிட்டனர்.. இதனால், அஷ்ரஃப் கனி நாட்டை விட்டே வெளியேறிவிட்டார்.. பிறகு, தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி பொறுப்பை ஏற்றனர்.. இவர்கள் பதவிக்கு வந்ததுமே, ஆப்கன் மக்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளே கலங்கித்தான் போயின.. தலிபான்களின் ஆட்சியை, பெரும்பாலும் யாருமே விரும்பவில்லை.. ஆனாலும் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதும் இல்லை..

 முல்லா உமர்

முல்லா உமர்

இந்நிலையில், ஒரு புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. தலிபான் இயக்க நிறுவனர் பெயர் முல்லா ஒமர்.. இவர் இறந்து 9 வருடங்கள் ஆகிவிட்டது.. கடந்த 2013ம் ஆண்டு உயிரிழந்தார்.. இவர் புதைக்கப்பட்ட இடத்தை, தற்போது தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்... ஜாபூல் மாகாணத்தில் சூரி மாவட்டத்தில் ஒமார்சா என்ற இடத்தில்தான், முல்லா ஒமரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாம்.. 9 வருடத்துக்கு முந்தைய சம்பவத்தை இப்போது தலிபான்கள் அரசு அறிவித்துள்ளது...

கசிந்த ரகசியம்

கசிந்த ரகசியம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தலிபான்களின் முன்னணி தலைவர்கள், இந்த நினைவிடத்தில் ஒன்றுகூடி, முல்லா ஒமருக்கு அஞ்சலி செலுத்தினார்களாம்.. இதையடுத்துதான், இந்த செய்தி வெளியாகி உள்ளது.. 9 வருடங்களாக இந்த சீக்ரெட்டை அவர்கள் மறைத்து வைத்திருந்ததற்கு ஒரு காரணமும் சொல்கிறார்கள்.. தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகிஹித் இதை பற்றி சொன்னதாவது:

சீக்ரெட் லீக்

சீக்ரெட் லீக்

"ஆப்கனை சுற்றி ஏகப்பட்ட எதிரிகள் முன்பு இருந்தார்கள்.. அதனால், எங்களின் நிறுவனர் புதைக்கப்பட்ட இடம் தெரிந்துவிட்டால், எதிரிகள் இந்த நினைவிடத்தை சிதைத்துவிடுவார்கள் என்ற பயத்தினால்தான், இதை இத்தனை வருடமாக, ரகசியமாகவே மூடி மறைத்தோம்.. இப்போது, எங்கள் ஆட்சி நடப்பதால், எந்த பிரச்சனையும் கிடையாது.. முல்லா ஒமரின் நினைவிடத்தை பொதுமக்களும் தாராளமாக வந்து பார்வையிடலாம்" என்றார் சபியுல்லா.

சவக்குழி

சவக்குழி

இவர்களின் நிறுவனர் இந்த முல்லா ஒமர் யார் தெரியுமா? இவரின் தலைமையில்தான் 1996ல் முதல்முறையாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அன்று கைப்பற்றியது... இதற்கு பிறகு பிறகு, 2001ல் அமெரிக்க ஆதரவு உள்ளூர் படைகளால் தலிபான்கள் விரட்டப்பட்டதால், முல்லா முகமது ஒமர் தலைமறைவாகி விட்டாராம்.. அப்படியே 2013-ல் உயிரிழந்தும் விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

முல்லா

முல்லா

அன்று ஆப்கன் பெண்களுக்கு எதிராக பல்வேறு ஒடுக்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது, இந்த முல்லா உமர் தலைமையிலான ஆட்சியில்தானாம்.. முக்கியமாக, பொது வாழ்க்கையில் இருந்து பெண்கள் முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டனர்.. அதேபோல, சாதாரண குற்றங்களுக்குகூட, மிக கடுமையான தண்டனையை இந்த முல்லா தருவாராம்.. ஆனால், இஸ்லாமிய சட்டப்படியே, மிக கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தி இருக்கிறார்கள்.. இப்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள தலிபான்கள் மீதும் இதே குற்றச்சாட்டுகள்தான் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

English summary
surprise details: Taliban reveal burial place of founder mullah omar 9 years after death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X