ஆப்கன் பெண்கள் இனி ஆண் மருத்துவரை பார்க்கக்கூடாது.. தலிபான்கள் ஆட்டம்.. ஆனா "இது" மட்டும் இடிக்குதே

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் நோய்வாய்ப்பட்ட பெண்கள் எவரும் இனி ஆண் மருத்துவர்களை அணுகவோ, அவர்களிடம் சிகிச்சை பெறவோ கூடாது என அந்நாட்டை ஆளும் தலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பெண்களை குறிவைத்து தலிபான்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், இந்த லேட்டஸ்ட் உத்தரவு பெரும் சர்ச்சையையும், பல்வேறு கேள்விகளையும் வகுத்துள்ளது.

படிப்பறிவும், அரசியல் அறிவும் இல்லாதவர்கள் ஆட்சியை கைப்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு ஆப்கானிஸ்தானே சிறந்த உதாரணமாக விளங்குவதாக சர்வதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பெண்களை குறிவைக்கும் தலிபான்கள்

பெண்களை குறிவைக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதும் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு செய்து வரும் அராஜகங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பெண்களின் வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் அங்கு பல்வேறு உத்தரவுகளை தலிபான் அரசு பிறப்பித்து வருகிறது. பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது; வெளியே செல்லும் போது கட்டாயம் புர்கா அணியாமல் செல்லக்கூடாது என ஆட்சிக்கு வந்த புதிதில் தலிபான்கள் உத்தரவிட்டனர். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு உருவான நிலையில், மேல்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பெண்கள் செல்லக்கூடாது என அண்மையில் தலிபான்கள் உத்தரவிட்டனர்.

செவிசாய்க்காத தலிபான் அரசு

செவிசாய்க்காத தலிபான் அரசு

பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்த தடைக்கு எதிராக அங்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்னர். இருந்தபோதிலும், தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க தலிபான்கள் தயாராக இல்லை. ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் இருக்கும் ஆப்கானிஸ்தான், எதிர்காலத்தில் பெண்களின் பங்களிப்பும் இல்லாமல் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிடும் என பொருளாார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அதை தலிபான்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

விசித்திர உத்தரவு

விசித்திர உத்தரவு

இந்த நிலையில்தான், அறிவுக்கு சற்றும் பொருந்தாத ஒரு உத்தரவை தலிபான்கள் தற்போது பிறப்பித்துள்ளனர். அதாவது, ஆப்கானிஸ்தான் பெண்கள் நோய்வாய்பட்டால் அவர்கள் ஆண் மருத்துவர்களை அணுகவோ, அவர்களிடம் சிகிச்சை பெறவோ கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக, அங்குள்ள பால்க் மாகாணத்தில் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்களுக்கு ஆண் மருத்துவர்களும், பெண்களுக்கு பெண் மருத்துவர்களும் மட்டுமே இனி சிகிச்சை அளிக்க முடியும்.

விசித்திர உத்தரவு

விசித்திர உத்தரவு

இந்த நிலையில்தான், அறிவுக்கு சற்றும் பொருந்தாத ஒரு உத்தரவை தலிபான்கள் தற்போது பிறப்பித்துள்ளனர். அதாவது, ஆப்கானிஸ்தான் பெண்கள் நோய்வாய்பட்டால் அவர்கள் ஆண் மருத்துவர்களை அணுகவோ, அவர்களிடம் சிகிச்சை பெறவோ கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக, அங்குள்ள பால்க் மாகாணத்தில் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்களுக்கு ஆண் மருத்துவர்களும், பெண்களுக்கு பெண் மருத்துவர்களும் மட்டுமே இனி சிகிச்சை அளிக்க முடியும்.

எப்படி பாஸ் இப்படி யோசிக்கிறீங்க?

எப்படி பாஸ் இப்படி யோசிக்கிறீங்க?

தலிபான் அரசின் இந்த விசித்திர உத்தரவை சர்வேதச ஊடகங்களும், கல்வியாளர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். படிப்பறிவும், அரசியல் அறிவும் இல்லாதவர்கள் ஆட்சியை கைப்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு ஆப்கானிஸ்தானே சிறந்த உதாரணமாக விளங்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் உயர்கல்வி கற்க தடை செய்யப்பட்டுவிட்டது. அப்பொழுது எப்படி பெண்கள் இனி மருத்துவர்களாக முடியும்? அப்படி பெண் மருத்துவர்கள் இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தான் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? நோய் முற்றி சாக வேண்டுமா? என அவர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+