மிக விரைவில் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி.. சில வாரங்களில் 90% பகுதிகளை கைபற்றிய தாலிபான்.. பரபர தகவல்
காபூல்: ஆப்கனில் தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு சுமார் 90% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாகத் தாலிபான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை எதிர்பார்த்துக் காத்திருந்த தாலிபான்கள் ஆப்கன் ராணுவம் மீது தங்கள் தாக்குதலை தொடங்கிவிட்டனது. பல்வேறு இடங்களிலும் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது.

தாலிபான்கள்
இந்த முறை தாலிபான்கள் எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் நாட்டுடன் இருந்த முக்கிய எல்லை கடக்கும் பகுதியை ஆப்கன் ராணுவம் கைபற்றியது. இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்தில் சுமார் 40% இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. தாலிபான்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் முன்னேறி வருகின்றனர். தாலிபான்களைக் கையாள்வதில் ஆப்கன் அரசுப் படைகள் திணறி வருகின்றன,

90% கைப்பற்றிவிட்டோம்
அதேபோல தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஈரானுடனான ஆப்கானிஸ்தானின் எல்லைகளை பெரும்பாலும் கைப்பற்றிவிட்டதாகத் தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் மொத்தம் 407 மாவட்டங்கள் உள்ளன. அதிலும் குறைந்தது 85% மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தாலிபான்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐஎஸ் பயங்கரவாதிகள்
ஆப்கனில் தாலிபான் அமைக்கும் புதிய ஆட்சியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் முழுவதுமாக ஒடுக்கப்படுவார்கள் என்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்குத் தாலிபான்கள் ஆட்சியில் இடமில்லை என்றும் தாலிபான்களின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய ஆசியா நாடுகள் அல்லது சீனாவில் இருந்து எந்தவொரு தீவிரவாதிகளும் நாட்டில் ஊடுருவவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடு சக்திகள்
தொடர்ந்து பேசிய அவர், "அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு எந்தவொரு வெளிநாட்டு ராணுவத்தின் படைகளும் ஆப்கன் மண்ணில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. காபூல் விமான நிலையத்தைத் துருக்கி எடுத்து நடத்தும் திட்டத்தை நாங்கள் முழுவதுமாக நிராகரித்துவிட்டோம். எந்தவொரு காரணத்திற்காகவும் வெளிநாட்டுச் சக்திகள் எங்கள் நாட்டில் இருப்பதை அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.

எல்லைப் பகுதிகள்
ஆப்கனில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ஆப்கன் அகதிகள் பலரும் தஜிகிஸ்தானில் தஞ்சம் அடையத் தொடங்கியுள்ளனர். ஆப்கன் எல்லையில் ராணுவ ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள ரஷ்ய ராணுவம், அடுத்த மாதம் முதல் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஆப்கன் எல்லையின் அருகில் சோதனை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications