For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கனில் இளவரசர் ஹரியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகள்: பரபரப்புத் தகவல்கள்

Google Oneindia Tamil News

Taliban: Prince Harry lucky to escape our repeated attempts to kidnap and kill him
லண்டன்: ஆப்கன் சென்றிருந்த போது இளவரசர் ஹரியை தாங்கள் கொல்லத் திட்டமிட்டதாகவும் ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்ததாகவும் தாலிபன் தீவிரவாதிகளின் கமாண்டர் குவாரி நஸ்ருல்லா பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ‘நேட்டோ' படையில் உள்ள இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் இளவரசர் ஹாரியும் அப்பாச்சி ஹெலிகாப்டரின் விமானியாக பணி புரிந்து வந்தார். அப்போது இங்கிலாந்து ராணுவத்தினர் சார்பில் அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார் ஹரி.

தற்போது, ஆப்கனில் பணி முடிந்து ஹரி இங்கிலாந்து திரும்பி விட்டார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அப்போது அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது இளவரசர் ஹாரிதான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார். அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்து விட்டார்.

இங்கிலாந்தில் வேண்டுமானால் அவர் இளவரசர் ஆக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை அவர் ஒரு சாதாரண ராணுவ வீரர்தான்' எனக் கூறியுள்ளார்..

English summary
Prince Harry was ‘lucky’ to make it out of Afghanistan alive, a senior Taliban commander has claimed, while revealing that there were numerous attempts to capture him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X