For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டுப்பாடுகளுடன்.. நைட் கிளப்களை திறக்கும் தாய்லாந்து.. பலே முடிவு.. பலான தொழில் தலை நிமிருமா?

Google Oneindia Tamil News

பாங்காக்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாங்காக்கின் சிவப்பு விளக்குப் பகுதியில் தொழில் நடத்தி வரும் பெண்கள் மூன்று மாதங்களுக்குப் பின்னர் தற்போது மாஸ்க் அணிந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக தாய்லாந்து நாட்டில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பார்கள், இரவு நேர கேளிக்கை நடனங்களுக்கு பெயர் பெற்ற பாங்காக் நகரமும் வெறிச்சோடியது.

எங்கு பார்த்தாலும் பார்கள், இரவு நேர நடனங்கள் என்று வண்ண விளக்குகளில் மிளிரும் பாங்காக்கிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் இல்லாமல் போனது.

எல்லையில் பதற்றம்: லடாக்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை ஆய்வுஎல்லையில் பதற்றம்: லடாக்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை ஆய்வு

நைட் கிளப்கள்

நைட் கிளப்கள்

தற்போது கடந்த 37 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லை என்ற நிலையில், கட்டுப்பாடுகளுடன் பார்கள், பின்னணி இசையில் மக்கள் பாடும் கிளப்புகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. பாங்காக் விடுதிகளை நம்பி பல ஆயிரக்கணக்கான செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக எந்த வேலையும் இல்லாமல் அவஸ்தைப்பட்டு வந்தனர்.

மாஸ்க் அணிந்து டான்ஸ்

மாஸ்க் அணிந்து டான்ஸ்

தற்போது மாஸ்க் அணிந்துதான் கேளிக்கை விடுதிகளில் பெண்கள் நடனமாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக வருமானம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது விடுதிகள் திறக்கப்படுவது தங்களுக்கு மகிழ்ச்சியை அளித்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

காய்ச்சல் இல்லாட்டி ஓகே

காய்ச்சல் இல்லாட்டி ஓகே

பார்களுக்கு, இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று சோதித்த பின்னரே அனுமதிக்கப்படுவர். தங்களது தொலைபேசி எண்களை விடுதியில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு கட்டுப்பாடு தளர்வு

மக்களுக்கு கட்டுப்பாடு தளர்வு

கடந்த சில வாரங்களுக்கு முன்பே மக்களுக்கான கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்தி இருந்தது. பள்ளிகளும் கடந்த புதன் கிழமை திறக்கப்பட்டன. ஆனால், அந்த நாட்டில் கோழிச் சண்டை மற்றும் மீன் சண்டைக்கான இடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதுவரை தாய்லாந்து நாட்டில் 3,173 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று குறைவுதான்

தொற்று குறைவுதான்

ஆசிய நாடுகளில் குறைவான தொற்று இருக்கும் நாடாக தாய்லாந்து இருக்கிறது. தாய்லாந்து முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், நடப்பாண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 80% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Bangkok red light districts have opened with performers wearing masks and bikinis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X