For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இசைக்கு வயது ஒரு தடையில்லை.. 108 வயதிலும் பியானோ வாசிக்கும் போலந்து பாட்டி!

போலந்தில் 108 வயது பெண் ஒருவர் தினமும் பியானோ வாசித்து ஆச்சர்யம் அளித்து வருகிறார்.

Google Oneindia Tamil News

வார்சா : போலந்தில் 108 வயது பாட்டி ஒருவர் தினமும் பியானோ வாசித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலந்தைச் சேர்ந்தவர் வாண்டா (108). சிறுவயதில் இருந்தே பியானோ மீது இவருக்கு தீராக்காதல் இருந்து வந்துள்ளது. தன் அம்மாவின் பியானோவை அவர் அவ்வப்போது வாசித்து வந்துள்ளார்.

the pianist still playing at the age of 108

குழந்தையாக இருந்தபோது, உக்ரேனில் உள்ள லிவிவ் பகுதியில் வசித்து வந்துள்ளார் வாண்டா. அங்கேயே இசை தொடர்பான படிப்புகளையும் அவர் படித்துள்ளார். ஆனால், 1931ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தொடர்ந்து பியானோ வாசிக்க இவருக்கு தடை ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?! கன்னியாகுமரியில் இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?!

இதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின், வாண்டாவின் குடும்பம் லிவிவ் பகுதியில் இருந்ஹ்டு க்ரகோவ் பகுதியில் குடியேறினர். அப்போது மீண்டும் வாண்டாவின் கைகளுக்கு அவரது பியானோ வந்து சேர்ந்தது. மீண்டும் பியானோ வாசிக்கத் தொடங்கினார் அவர்.

the pianist still playing at the age of 108

வாண்டாவிடம் இருக்கும் பியானோ போலந்து நாட்டின் மிகவும் பழமையான இசைக் கருவியாகக் கருதப்படுகிறது. காரணம் அது அவரது அம்மா பயன்படுத்தியது.

தற்போது 108 வயதாகும் வாண்டா, தினமும் பியானோ வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இசைக்கு வயது ஒரு தடையில்லை என அவர் நிரூபித்துள்ளார். இந்த வயதிலும் வாண்டா ஆரோக்கியமாக இருக்க இசை தான் முக்கியக் காரணம் என்கின்றனர் அவரது உறவினர்கள்.

English summary
Wanda Zarzycka proves that age is just a number, not a hindrance. At 108, this woman from Poland is still playing the piano every day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X