சவுதியின் சொகுசு சிறை மீண்டும் ஹோட்டலாக மாற்றப்பட்டது.. தொடங்கியது புக்கிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியாவில் தற்போது தொடர் அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. அங்கு இருக்கும் பல இளவரசர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

முக்கியமாக சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு இருக்கும் முக்கிய அதிகாரிகளின் வீட்டில் சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்று சோதனை நடத்தினார்.

இதன் பின்பே பல்வேறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அங்கு இருக்கும் ''தி ரிட்ஸ் கார்ட்லான்'' ஹோட்டலில் சிறையடைக்கப்பட்டார்கள்.

அல்வாலீத் பின் தலால் கைது

அல்வாலீத் பின் தலால் கைது

இதில் சவுதியின் முக்கியமான பணக்காரரும், இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பண மோசடி செய்ததாகவும், நாட்டின் பொருளாதரத்தை சிதைத்ததாகவும் கூறப்பட்டது.

ஹோட்டல்

ஹோட்டல்

இவர் உள்ளிட்ட அனைவரும் ''தி ரிட்ஸ் கார்ட்லான்'' ஹோட்டலில் சிறையடைக்கப்பட்டார்கள். அந்த ஹோட்டலில் 492 அறைகளில் இவர்கள் இருந்தார்கள். இதனால் அந்த ஹோட்டல் மூடப்பட்டு தற்காலிக சிறைச்சாலையாக செயல்பட்டது.

பலர் விடுதலை

பலர் விடுதலை

இந்த நிலையில் சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டு தவறு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 381 பேரில் 56 பேர் மட்டும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டு மற்றவர்கள் நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் இயங்கும்

மீண்டும் இயங்கும்

இதனால் அந்த ஹோட்டல் மீண்டும் இயங்கும் என்று கூறப்பட்டு உள்ளது. பிப்ரவரி 14ம் தேதியில் இருந்து முன்பதிவு ஆரம்பம் ஆகும். முன்பு இருந்ததை விட அனைத்து அறைகளின் விலைகளும் குறைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Court releases Saudi Prince Alwaleed bin Talal. Corut takes back all the corruption probe against him. He will remain in the power of Kingdom. After this announcement The Ritz-Carlton in Riyadh reopens for business.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற