கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO அனுமதி கிடைக்குமா?இன்று முக்கிய ஆய்வு! வெளிநாடு செல்வோர் எதிர்பார்ப்பு
ஜெனிவா: உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு செவ்வாய்கிழமையான இன்று கோவாக்சின் தடுப்பூசி பற்றிய டேட்டாக்களை மதிப்பாய்வு செய்ய உள்ளது.
இதைத் தொடர்ந்து கோவாக்சின் அவசரகால பயன்பாட்டு பட்டியல் குறித்த முடிவு விரைவில் விரைவில் எடுக்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
"அனைத்தும் சரியாக நடந்தால், ஆய்வுக் குழு திருப்தி அடைந்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவசர கால பயன்பாடு தொடர்பான பரிந்துரையை எதிர்பார்க்கிறோம்" என்று மார்கரெட் ஹாரிஸ், ஐ.நா செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

10 கோடி பேர்
பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் செலுத்தியுள்ளனர். ஆனால் WHO ஒப்புதல் நிலுவையில் உள்ளதால், வெளிநாட்டு பயணங்களின்போது இந்த தடுப்பூசியை பிற நாடுகள் பரிசீலனை செய்வதில்லை.

தரவு கொடுத்து நாளாச்சு
கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை 9ம் தேதி சமர்ப்பித்தது. இதனையடுத்து விரைவில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பது தாமதமாகிவந்தது.

அரசு நம்பிக்கை
சமீபத்தில், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி விரைவில் கிடைக்கும் என இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் கோவாக்சினுக்கு அவசரகால அனுமதி அளிப்பது ஒரு தொழில்நுட்ப செயல்முறை. நிர்வாக செயல்முறையோ அல்லது அரசியல் செயல்முறையோ அல்ல. கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த தரவுகளை மதிப்பீடு செய்ய ஒரு தொழில்நுட்பக் குழு உள்ளது. அக்குழு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. சில பதில்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே உலக சுகாதார நிறுவனத்திலிருந்து கோவாக்சினுக்கான ஒப்புதல் விரைவில் வரும் என்று நம்புகிறேன், என்று கூறியிருந்தார்.
Recommended Video

சுதந்திரமான பயணம்
உலக சுகாதார அமைப்பு இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கினால், அதை செலுத்தியவர்கள், வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவுகளின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. உலக சுகாதார ஆய்வு மையம் அங்கீகாரம் வழங்கி விட்டால் பிறகு இந்த தடுப்பூசிகளுக்கு, தேவை இந்தியாவில் அதிகரிக்கும். ஒரே தடுப்பூசியை மட்டும் சார்ந்து இருக்காமல் இருக்க வகை செய்யும்.

தட்டுப்பாடுகள்
பொதுவாக கோவிஷீல்ட் தடுப்பூசி எளிதாக கிடைக்கிறது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் படைத்தவர்களுக்கு இரண்டாவது டோஸ் கிடைப்பதில் கூட பிரச்சினை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications