For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீலேவுக்கு தொப்பி... மெஸ்ஸிக்கு கருப்பு அங்கி! அப்போ புரியல இப்போ புரியுது.. இதுதான் காரணமா?

Google Oneindia Tamil News

டோஹா: கத்தாரில் நடந்து முடிந்த FIFA 2022 உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்ற நிலையில் அணி தலைவரான மெஸ்ஸிக்கு கருப்பு நிற அங்கி அணியப்பட்டது.

இந்த அங்கி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து ஏன் இந்த அங்கி அணியப்பட்டது? இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து பலரும் தேடி வருகின்றனர்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் உலக கோப்பை நடைபெறும் போதும் அந்நாட்டின் சிறப்பு வாய்ந்த ஒன்று வெற்றி பெற்ற அணியின் கேப்டனுக்கு வழங்கப்படுவது இயல்பு.

 கனிமொழி எம்.பி. பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் கிஃப்ட்! மாற்றியோசித்த திமுக மகளிரணி பிரமுகர்! கனிமொழி எம்.பி. பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் கிஃப்ட்! மாற்றியோசித்த திமுக மகளிரணி பிரமுகர்!

பீலேவுக்கு தொப்பி

பீலேவுக்கு தொப்பி

இதேபோல கடந்த 1970ல் FIFA உலக கோப்பையை வென்ற பின்னர் பிரேசில் அணியின் கேப்டனுக்கு ஒரு விசித்திரமான தொப்பி வழங்கப்பட்டது. இந்த போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. போட்டியில் பிரேசில் 4க்கு 1 என்கிற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அப்போது பீலேவுக்கு உலக கோப்பை வழங்கப்படுவதற்கு முன்னர் தொப்பி ஒன்று அணிவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தொப்பி 'மெக்சிகன் சோம்ப்ரெரோ' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மெக்சிகோவில் வெயில் அதிகம் இருப்பதால் அதிலிருந்து முகத்தையும் கண்களையும் பாதுகாக்க இந்த தொப்பிகள் பயன்படுத்தப்பட்டன.

கருப்பு அங்கி

கருப்பு அங்கி

நாளடைவில் இந்த தொப்பிகளில் சிறிது மாற்றம் செய்து ஷெரிப் எனப்படும் காவல்துறை அதிகாரிகள் அணியத் தொடங்கினர். பின்னர் குறிபார்த்து துப்பாக்கிச்சுடும் வீரர்கள் இதனை பயன்படுத்த தொடங்கினர். அந்த வகையில் அந்நாட்டில் பெரும் பணக்காரர்கள், மக்கள் மத்தியில் தங்களை செல்வாக்கானவர்களாகவும், கவுரவக்காரர்களாகவும் காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் பல்வேறு வடிவங்களில், அலங்காரங்களில் இந்த தொப்பியை பயன்படுத்தினர். அப்படிதான் உலக கோப்பையை வென்ற பீலேவுக்கு இந்த தொப்பி அணிவிக்கப்பட்டது. தற்போது இதனைத் தொடர்ந்து நேற்று நடந்து முடிந்த 2022ம் ஆண்டு FIFA உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸிக்கு அவரை கவுரவப்படுத்தும் விதமாக கருப்பு அங்கி அணியப்பட்டது.

விவாதம்

விவாதம்

இந்த அங்கி 'பிஷ்ட்ஸ்' என்று அழைக்கப்படும். இது ஆட்டு முடி மற்றும் ஒட்டகத்தின் தோலினால் செய்யப்பட்டுள்ளது. அக்காலத்தில் போருக்கு செல்லும் மன்னர் அல்லது தளபதி ஆகியோர் இதனை அணிந்து செல்வார்கள். தற்போதைய காலத்தில் திருமணம், பதவியேற்கும்போது அல்லது பட்டம் பெறும்போது இந்த அங்கியை அந்நாட்டு மக்கள் அணிந்துகொள்வார்கள். எனவே உலக கோப்பையை கைப்பற்றியதால் அவருக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் இந்த அங்கியை அவர் கழற்றிவிட்டார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.

கழற்றியதற்கான காரணம்

கழற்றியதற்கான காரணம்

முதலில் கருப்பு நிறத்தில் அங்கி அணியப்பட்டதே தவறு. இது அபசகுணம் என்று சிலர் வாதிட்டனர். பின்னர் அவர் அங்கியை கழற்றி வைத்துவிட்டு கத்தார் நாட்டின் மரியாதையை அவமதித்துவிட்டார் என்றும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இதற்கு கத்தார் நாட்டை சேர்ந்தவர்களே விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது இந்த அங்கியை நீண்ட நேரம் அணிந்திருக்கக்கூடாது. எனவேதான் மெஸ்ஸி அதனை கழற்றிவிட்டார் என்று கூறியுள்ளனர்.

English summary
Team captain Messi wore a black shirt as Argentina won the FIFA 2022 World Cup in Qatar. These robes are known as 'Bisht'. It is made of goat hair and camel skin. At that time, the king or commander who went to war would wear it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X