For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”வியர்வை மழை”யில் தவித்த பெண்... கட்டாய விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய அலுவலகம்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் 25 வயதான பெண் ஒருவருக்கு வியர்வை அருவியாக கொட்டி வருவதால் அவருக்கு 6 மாதம் விடுப்பு அளித்துள்ளது அவரது அலுவலகம்.

இங்கிலாந்தில் உள்ள பெர்க்‌ஷயர் மெயிடன்ஹெட்டை சேர்ந்தவர் எஸ்மி டி சில்வா. பள்ளிக்கூட நாளில் இருந்து மிகுதியாக உடல் முழுவதும் வியர்ப்பதால் பல கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாகி உள்ளார்.

தற்போது இவர் இந்த தொடர்ந்து வழிந்தோடும் வியர்வையால் 6 மாதம் விடுமுறை அளித்து கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வியர்வைக் குளியல்:

வியர்வைக் குளியல்:

பள்ளி நாட்களில் உடம்பு முழுவதும் தொடர்ந்து வியர்த்து கொண்டு இருந்ததால் அவர் நரக வேதனையை அனுபவித்து உள்ளார்.ஒவ்வொரு நாளும் அவர் வியர்வையில் நனைந்து போய்தான் வீட்டுக்கு வருவார்.

சிரித்த மக்கள்:

சிரித்த மக்கள்:

இவர் இளம் பருவத்திற்கு வந்ததும் இதே பிரச்சினையால் அவதிக்கு உள்ளாகி உள்ளார். இது குறித்து அவர், "இந்த வியர்க்கும் பிரச்சினையால் சிறு வயதில் நான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானேன்.மக்கள் என்னை பார்த்து பேசுகிறார்கள், என்னை பார்த்து சிரிக்கிறார்கள் என எனக்கு ஒரு பிரமை ஏற்பட்டது.

தினமும் வாசனை திரவியங்கள்:

தினமும் வாசனை திரவியங்கள்:

நான் ஓவ்வொரு நாளும் எனது சீருடையை சுத்தம் செய்ய வேண்டியது இருந்தது. நான் அதிக அளவு வாசனை திரவியங்களை பயன்படுத்தினேன்.எப்போதும் அணிவதற்கு ஒரு செட் சீருடை எனது பையில் வைத்திருப்பேன்.

எச்சரிக்கை தேவை:

எச்சரிக்கை தேவை:

ஷாப்பிங் செய்வது என்பது எனது கனவாகவே இருந்தது.நான் எந்த பொருளை பயன்படுத்தினாலும் மிகவும் எச்சரிக்கையுடனேயே பயன்படுத்தினேன். செயற்கை பொருட்கள் 10 மடங்கு மோசமான பிரச்சினையை உருவாக்குகிறது. பயணம் என்பது இதை விட மோசாமான விளைவை ஏற்படுத்துகிறது. நான் நல்ல திறன் இருந்தும் இந்த வியர்வையால் எனது வேலையை செய்யமுடியவில்லை என்பதை உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

உணவு முறைகளில் மாற்றம்:

உணவு முறைகளில் மாற்றம்:

கடந்த ஒரு வருடமாக டாக்டர்களின் ஆலோசனையை பெற்று வருகிறார்.தனது உணவு முறைகளையும் தனது உடை முறைகளையும் மாற்றி உள்ளார்.

பயனே இல்லையாம்:

இருந்தும் எந்த வித பயனும் இல்லை.மருத்துவர்கள் அடுத்ததாக எஸ்மியின் கைகளில் ஊசி ஏற்றி அதற்கு அடுத்த சிகிச்சைகள் குறித்து ஆராய தொடங்கி உள்ளனர்.

English summary
Ever since school Esme De Silva was teased over her hyperhidrosis – or excessive sweating – and in the end it became so unbearable she took a six month sabbatical from work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X