For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா!

Google Oneindia Tamil News

ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

கொரோனா தாக்கம் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்தபோது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பிரேசிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

பிரேசிலில் தாக்கம் அதிகம்

பிரேசிலில் தாக்கம் அதிகம்

உலக நாடுகளை பொறுத்தவரையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆட்டிபடைத்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,202 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2,16,445 ஆக அதிகரித்துள்ளது.

ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றசாட்டு

ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றசாட்டு

பிரேசிலில் இந்த அளவுக்கு கொரோனா பரவியதற்கு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மோசமான செயல்பாடுகளே என கூறப்படுகிறது. கொரோனா தாக்கம் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்தபோது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

வீதிகளில் இறங்கி போராட்டம்

வீதிகளில் இறங்கி போராட்டம்

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். ரியோ டி ஜெனிரோ, சாவ் பாலோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்திய மக்கள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். கார்களில் சென்றும், பேரணியாக சென்றும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை

ஆக்ஸிஜன் பற்றாக்குறை

போராட்டத்தில் ஈடுபட்ட 66 வயதான என்ஜினீயர் மெக் பெர்னாண்டஸ் கூறியதாவது:-
போல்சனாரோ வந்தபோது அவரது முன்மொழிவுகளுக்கு நாங்கள் அவருக்கு வாக்களித்தோம், ஆனால் இப்போது தொற்றுநோயால் நிலைமை பயங்கரமாகி விட்டது. அவரது நடவடிக்கை சரியில்லை.வடக்கு நகரமான மனாஸின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்று மெக் பெர்னாண்டஸ் கூறினார்.

English summary
Thousands of people have taken to the streets in Brazil to protest the president's failure to take action against Corona
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X