3 விமானங்களில் ரஷ்யாவில் இருந்து எகிப்து விரைந்த மீட்பு குழு
மாஸ்கோ: விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்திற்கு மீட்பு குழுவினரை அனுப்புமாறு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதையடுத்து மீட்பு குழுவினர் எகிப்து கிளம்பினர்.
224 பேருடன் எகிப்தில் இருந்து ரஷ்யா கிளம்பிய விமானம் சினாய் மாகாணத்தில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானம் விழுந்த இடத்தில் இருந்து 2 கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு மீட்பு குழுவினரை அனுப்பி வைக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து 3 விமானங்களில் மீட்பு குழுவினர்கள், விமான போக்குவரத்து நிபுணர்கள், அமைச்சர் விளாடிமிர் புஷ்கோவ், போக்குவரத்து துறை அமைச்சர் மேக்சிம் சோகோலோவ் மற்றும் ரஷ்ய விமான போக்குவரத்து ஏஜென்சியின் தலைவர் அலெக்சாண்டர் நெராட்கோ ஆகியோர் எகிப்து கிளம்பியுள்ளனர்.
விமான விபத்து குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. விமானத்தில் 10 மாத பெண் குழந்தை, 2 மற்றும் 3 வயது குழந்தைகள் என மொத்தம் 17 குழந்தைகள் இருந்தனர்.
விமானத்தில் இருந்த பயணிகளில் 3 பேரை தவிர அனைவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். எகிப்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்புகையில் நடந்த விபத்தில் அவர்கள் பலியாகியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications