For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 16 வீரர்களை சாய்த்த தொற்று.. ஒலிம்பிக்ஸை கதற விடும் கொரோனா.. பீதியில் டோக்கியோ..!

டோக்கியோவில் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டு வருகிறது

Google Oneindia Tamil News

டோக்கியோ: டோக்கியோவில் இன்று 3,177 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதேபோல ஒலிம்பிக்கில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வீரர்கள், பொதுமக்களிடையே கலக்கம் சூழ்ந்துள்ளது.. கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன..!

நமக்காவது இங்கு 2வது அலைதான்.. ஜப்பானில் 4வது கொரோனா பரவல் அலை தீவிரமாக இருக்கிறது... இதனால், தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டன..

இதற்கு பிறகு ஓரளவு தொற்று குறைந்தது.. தொற்று குறையவும் கட்டுப்பாடுகளை தளர்த்தியது அந்நாடு... ஆனால், இப்போது மறுபடியும் அங்கு தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

மறுபடியும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், டோக்கியோவில் கடந்த வாரம் முதல் ஒலிம்பிக் போட்டிகளும் நடந்து வருவது மேலும் அச்சத்தை கூட்டி வருகிறது.. இத்தனைக்கும் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நிலையில்தான் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.. டோக்கியோவில் கடந்த வியாழக்கிழமை 1,979 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜனவரி மாதத்திற்குப் பிறகு கடந்த வியாழக்கிழமைதான் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

 டோக்கியோ

டோக்கியோ

அதேபோல, நேற்றைய தினம் ஒரே நாளில் டோக்கியோவில் 2,848 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட பிறகு டோக்கியோவில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச தொற்று இதுதான் என்று சொன்னார்கள்.. ஆனால்,நேற்றைவிட இன்றைய தினம் அதற்கு மேல் ஷாக் தகவல் வந்துள்ளது.. 3,177 பேர் இன்று டோக்கியோவில் பாதிக்கப்பட்டுள்ளனராம்.. இப்படி தொற்று அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பீதிதான் அதிகமாகி கொண்டிருக்கிறது..

வீரர்கள்

வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் வட்டாரத்தில் 16 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.. இந்த 148 நபர்களில் பெரும்பாலானோர் 15 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்தானாம்.. இன்று பாதிக்கப்பட்ட 16 நபர்களுள் 3 தடகள வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்... அதாவது 3 தடகள வீரர்கள், விளையாட்டுக்களுடன் தொடர்புடைய நபர்கள் 8 பேர், ஒலிம்பிக் ஊழியர் ஒருவர், ஒலிம்பிக் ஒப்பந்ததாரர்கள் 4 பேர் என மொத்தம் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அச்சம்

அச்சம்

இதனால் ஒலிம்பிக்கை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 169 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்று எண்ணிக்கையானது நாளுக்கு நாள் டோக்கியோவில் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்... மக்கள் இதனால் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஜூன் ஆஜ்மி சொல்லும்போது, தொற்றுப் பரவல் குறித்து அரசு, அதீத நம்பிக்கையுடன் செயல்படுகிறது.. இப்படி இருந்தால் நிச்சயம் மோசமான நிலைமைதான் ஏற்படும்" என்று எச்சரிக்கிறார்.. இப்போதைக்கு ஜப்பான் அணிதான் பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.. என்றாலும், ஒலிம்பிக் முடிந்ததுமே ஜப்பானை கொரோனா எனும் புதிய தேசிய நெருக்கடி தாக்கும் என்ற விமர்சனங்கள் இப்போதே முன்வைக்கப்பட்டு வருகின்றன.

English summary
Tokyo records 3000 covid cases and 16 new cases in Tokyo Olympics 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X