For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துருக்கியில் திடீர் ராணுவ புரட்சி... இந்தியர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

By Jaya
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி ஒன்றில் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. துருக்கி தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புல் வாழும் இந்தியர்களுக்கான அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

அங்காராவில் வாழும் இந்தியர்கள் 905-303-142-203 என்ற தொலைபேசி எண்ணையும், இஸ்தான்புலில் வாழும் இந்தியர்கள் 905-305-671-095 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு உதவி கோருமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கேட்டுக் கொண்டுள்ளார்.

turkey3

துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. துருக்கியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் அங்காராவில் அரசு மாளிகை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையங்கள் மூடல்

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள அதர்துக் விமான நிலையம் மூடப்பட்டு டேங்கிகளுடன் ராணுவத்தினர் ரோந்து செல்கின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் துருக்கி நாட்டில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் துருக்கி தலைநகர் அங்காராவில் கடும் துப்பாக்கி சண்டை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதற்றம் நீடிப்பு

நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் பதற்றம் நீடித்து வருவதால், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, துருக்கியில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால், இந்தியர்கள் யாரும் பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்றும், வீட்டிற்குள்ளேயே பத்திரமாக இருக்குமாறும் விகாஸ் ஸ்வரூப் அறிவுறுத்தியுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு

துருக்கி தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புல் வாழும் இந்தியர்களுக்கான அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அங்காராவில் வாழும் இந்தியர்கள் 905-303-142-203 என்ற தொலைபேசி எண்ணையும், இஸ்தான்புலில் வாழும் இந்தியர்கள் 905-305-671-095 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு உதவி கோருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Ministry of External Affairs spokesperson Vikas Swarup on Saturday has offered help to Indian citizens in Turkey as the situation in Turkey continues to grow tense.Turkey Emergency contact numbers for Indian nationals In Ankara: +905303142203In Istanbul: +905305671095
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X