For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் காணாமல் போன 2 இந்திய மாணவர்கள்-பீதியில் பெற்றோர்

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்திய மற்றும் அமெரிக்க மாணவர்கள் இருவர் திடீரென்று காணமல் போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே, இரண்டு நர்சிங் மாணவர்கள் பத்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன விவகாரத்தில் நியூயார்க் நகரத்தில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் தனது விடுமுறைக்கு ஃப்ளோரிடா சென்ற இடத்தில் காணமல் போய் உள்ளார்.

ரென்னி ஜோஸ் எனப்படும் அந்த மாணவர் சனிக்கிழமை அன்று ஃப்ளோரிடாவின் பனாமா சிட்டியை வந்து அடைந்தார்.ஆனால்,திங்களன்று அவர் காணாமல் போய்விட்டார்.

காவல்துறை அதிகாரி ஒருவர் இது பற்றி கூறியதில் ,"ஜோஸ்ஸின் துணிகள்,அவர் தங்கி இருந்த வீட்டின் பின்புற குப்பை தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும்,அவர் படிக்கும் ரைஸ் பல்கலைக்கழகம் இதனை பற்றி மாணவர்களிடம் கூறி விசாரித்துள்ளது.ஆனால்,இது வரை அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை".

காணமல் போன ரென்னி நியூயார்க்கின் லதாம் பகுதியை சேர்ந்தவர்.லதாமில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் ரைஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து வருகிறார்.

அதே நேரத்தில் ஜாஸ்மின் ஜோசப் என்ற 22 வயது பெண்ணும் காணாமல் போய் உள்ளார்.அவருடைய பெற்றோர் தாங்கள் அவருடைய கல்லூரியான நியூயார்க் பொறியியல் கல்லூரியில் தேர்வுக்கான பணத்தை செலுத்த சென்றபோது, கல்லூரி நிர்வாகத்தினர் அவர் மே மாதத்தில் இருந்தே கல்லூரியில் இல்லை என்று கூறியுள்ளனர்.

கடந்த மாதம் மற்றொரு இந்திய வம்சாவளி மாணவர் பிரவீன் வர்கீஸ் காணாமல் போய் இலினியாஸில் உயிர் அற்ற நிலையில் கண்டு பிடிக்கப் பட்டார்.

காணாமல் போன மாணவர்களுக்காக அவர்களது குடும்பத்தினர் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி தேடி வருகின்றனர்.

மீண்டும்,மீண்டும் மாணவர்கள் காணாமல் போகும் சம்பவம் அமெரிக்க மாணவர்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.

English summary
Washington, March 6: Even as search continues for an Indian-American nursing student who went missing in New York 10 days ago another India native has mysteriously vanished on a spring break trip to Florida.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X