For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.. உக்ரைன் அரசு

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் நாட்டிற்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யாவை போரை நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

    S 400 missile system | US என்ன தடை போட்டாலும்! India-வுடன் நிற்கும் Russia | Oneindia Tamil

    உக்ரைனில் நேற்று 10 ஆவது நாளாக நடந்த தாக்குதலின் போது மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மனிதாபிமான அடிப்படையில் சில பகுதிகளில் மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது.

    இதையடுத்து மீண்டும் போரை தொடங்கியது இன்று 11 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனை விட்டு வெளியேற மாட்டோம் என அதிபர் ஜெலன்ஸ்கியும் கடுமையாக போராடி வருகிறார். அவ்வப்போது பொதுமக்கள் முன்பு ஜூம் மீட்டில் தோன்றி பேசி வருகிறார்.

    அமெரிக்க அதிபர் ஜோபிடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை.. என்ன பேசினார்? அமெரிக்க அதிபர் ஜோபிடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை.. என்ன பேசினார்?

    உக்ரைன் மீதான போர்

    உக்ரைன் மீதான போர்

    உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என எத்தனையோ நாடுகள் கேட்டுக் கொண்ட நிலையிலும் ரஷ்யாவோ கேட்டபாடில்லை. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், போர் நிறுத்த ஒப்பந்தங்களை ரஷ்யா மீறி வருகிறது.

    அப்பாவி பொதுமக்கள்

    அப்பாவி பொதுமக்கள்

    அப்பாவி பொதுமக்களையும் வெளிநாட்டு மாணவர்களையும் ரஷ்ய ராணுவத்தினர் சுடுவதை நிறுத்த வேண்டும். கடந்த 30 ஆண்டுகள் வரை ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை உக்ரைன் வரவேற்றுள்ளது. எனவே அவர்கள் இந்த போர் சூழலில் நாட்டை விட்டு வெளியேற அந்த மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

     ரயில்கள்

    ரயில்கள்

    அவர்கள் வெளியேற ரயில்களை ஏற்பாடு செய்துள்ளோம். உதவி எண்களை ஏற்படுத்தியுள்ளோம். தூதரகத்துடன் பணியாற்றி வருகிறோம். உக்ரைன் அரசு தங்களால் இயன்ற அளவு செய்து வருகிறோம். உக்ரைனில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் அனுதாபத்தை பெற ரஷ்யா முயற்சிக்கிறது.

    ரஷ்யா

    ரஷ்யா

    வெளிநாட்டு மாணவர்களை ரஷ்யா மோசமாக கையாள்வதை நிறுத்தினால் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவர். இதற்காக இந்தியா, சீனா, நைஜீரியா உள்ளிட்ட நாட்டு அரசுகள் ரஷ்யாவிடம் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறும் அப்பாவி மக்களை தாக்காமல் இருக்குமாறும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

    English summary
    Ukraine Foreign minister Dmytro Kuleba calls India to appeal Russia to stop the ongoing aggressive war.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X