ஏவுகணை மழை.. உக்ரைனில் தொடர்ந்து போர் குற்றத்தில் ஈடுபடும் ரஷ்யா? 109 குழந்தைகள் பலியானதாக அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் சுமார் 100 குழந்தைகள் பலியானதாகவும், ரஷ்யா தொடர்ந்து போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 25நாட்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. தொடர்ந்து தரைவழி வான்வழி தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.

நவீன ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், குடியிருப்புகளில் தாக்குதல் நடத்தி அந்நாடு போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாக ஐரேப்பிய நாடுகளும், உக்ரைனும் குற்றம் சாட்டுகிறது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

இந்நிலையில் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பைடன் எச்சரித்திருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் சீனா எத்தகைய விளைவுகளை சந்திக்கும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

ரஷ்யா போர் குற்றம்

ரஷ்யா போர் குற்றம்

உக்ரைனில் இருந்து நேற்று ஒரேநாளில் 9 ஆயிரத்து 145 பேர் வெளியேறியுள்ளனர். ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள மரியபோல் நகரில் இருந்து மட்டும் நேற்று 4 ஆயிரத்து 972 பேர் வெளியேறி உள்ளனர். மேலும் போரில் இதுவரை 109 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தளுக்கு ஆளாகி வருவதாகவும் போரை நிறுத்த வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது.

பேச்சுவார்த்தைக்கு தயார்

பேச்சுவார்த்தைக்கு தயார்

விமான நிலையங்கள், அனுமின் நிலைங்கள், ராணுவ கமெண்ட் மையங்கள், மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல மில்லியன் டாலர்கள் இழப்பும், பொதுமக்களின் உயிர்களும் சேதமடைந்தாலும், உக்ரைன் ஆயுதங்களை கைவிட தயாராக இல்லை. அதே நேரத்தில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் வந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெனஸ்கி கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், தீவிர சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கான நேரம் இது என அவர் தெரிவித்துள்ளார்.

பொலாரஸுக்கும் தடை

பொலாரஸுக்கும் தடை

உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வரும் நிலையில், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெலாரஸ் மீதும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக பெலாரஸ் நாட்டில் கோதுமை, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், பெலாரசுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+