மக்கள்தொகை குறைஞ்சிட்டே வருதாம்.. இப்படி முடிவை எடுத்த சீனா! கட்டுப்பாடுகளை தளர்த்தும் அதிகாரிகள்
மக்கள்தொகையை அதிகரிக்க திருமணம் ஆகாத பெண்களும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பீஜிங்: சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது. இதனால் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள சிச்சுவான் மாகாணத்தில் அனுமதி அளித்துள்ளது. அதேபோல், அனைத்து சலுகைகளும் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கும் வழங்க சிச்சுவான் அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி சீனாவின் மக்கள் தொகை 141.24 கோடியாக உள்ளது.
சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருந்தாலும் இந்தியாவின் மக்கள் சீனாவை விஞ்சியிருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

ஒரு குழந்தை மட்டும் பெற கட்டுப்பாடு
சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 1980 ஆம் ஆண்டு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. இதனால், சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது. அதையடுத்து 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டு விதியில் திருத்தம் கொண்டு வந்தது. எனினும், பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள
இதனால் பதறிப்போன சீனா கடந்த சில ஆண்டுகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. மேலும் தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் சீனா அறிவித்தது. பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே சென்றால் மக்கள் தொகை 2025- ஆம் ஆண்டிற்குள் குறையும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டதால் இந்த பெரிய மாற்றத்தை சீனா கொண்டு வந்தது.

திருமணம் ஆகாதவர்களும்
தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க சீனா முயற்சித்தாலும் அது குறிப்பிடத்தக்க எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், தற்போது அடுத்த முயற்சியாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 3 குழந்தைகள் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதேபோல், அனைத்து சலுகைகளும் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கும் வழங்க சிச்சுவான் அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
இந்த புதிய விதிகள் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் சிச்சுவான் மாகாணம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்பாக சிச்சுவான் மாகாணத்தில் திருமணமான பெண்கள் மட்டுமே குழந்தைகள் பிறப்பு தொடர்பாக பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. திருமணம் மற்றும் குழந்தைகள் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக வீழ்ச்சியை சந்தித்ததையடுத்து சிச்சுவான் இந்த முடிவை எடுத்துள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications