For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016: வெள்ளை மாளிகையில் குடியேறப்போவது ஹிலாரியா? டிரம்பா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன் : உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 8ம் தேதியான நாளை நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் போட்டியிடும் இந்த தேர்தல் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு பரபரபாகியுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் குடியேறப்போவது ஹிலாரி கிளிண்டனா? டொனால்ட் டிராம்பா என்ற எதிர்பார்ப்பு பலரிடையே எழுந்துள்ளது.

சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், பாலியல் புகார்கள் போன்றவற்றால் டிரம்ப் கடும் விமர்சனங்களை சந்தித்தார். டிரம்பின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் ஹிலாரிக்கு செல்வாக்கு உயர்ந்தது.

US election 2016: Latest forecast in race between Hillary Clinton and Donald Trump

அதே நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி இருந்தபோது, அரசு பணிக்காக சொந்த இமெயிலை பயன்படுத்தியதும், பல்வேறு முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது நிரூபிக்கப்பட்டால் ஹிலாரி மீது கிரிமினல் நடவடிக்கை பாயலாம் என்று எப்பிஐ எச்சரித்துள்ளதால் இந்த விவகாரம் தற்போது ஹிலாரிக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.

ஹிலாரியை காட்டிலும் டிரம்புக்கு ஒரு சதவீத ஆதரவு அதிகம் இருப்பதாக சமீபத்திய வெளியான கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய நிலவரப்படி இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.

ஹிலாரிக்கு பெண்கள், நகர்புறங்களில் வசிப்போர், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மத்தியில் செல்வாக்கு உள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், பழமைவாதிகள் டிரம்பை ஆதரிக்கின்றனர்.

முந்தும் ஹிலாரி

இரு தினங்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. பல்வேறு ஊடகங்கள் நவம்பர் 2ம்தேதி வரை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தொடர்ந்து ஹிலாரியே முன்னிலை பெற்றுள்ளார். பிபிசி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 48 சதவீத வாக்குகளுடன் ஹிலாரி முன்னிலை பெற்றுள்ளார். டிரப்புக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடும் போட்டி

டி.பி.எம். போல் டிரக்கர் இதழ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், 46.7 சதவீத வாக்குகளுடன் ஹிலாரி வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் 44.8 சதவீத வாக்குகள் பெறுவார் என கூறப்பட்டுள்ளது. ஐ.பி.டி/டி.ஐ.பி.பி. வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஹிலாரி மற்றும் டிரம்ப்க்கு சமமான வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஸ்முஸ்சென் ரிப்போட்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 45% வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். ஹிலாரிக்கு 42 % வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மாறி மாறி கருத்துக்கணிப்பில் இருவரும் முந்தினாலும் தேர்தல் நாளில் யார் பக்கம் அதிர்ஷ்டக்காற்று வீசப்போகிறதோ?

வெள்ளை மாளிகை யாருக்கு

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் உள்ளாகியுள்ளது இதற்குக் காரணம் அதிபர் பதவி போட்டியில் உள்ள இரு வேட்பாளர்களுமே சர்ச்சையில் சிக்கியுள்ளனர் என்பதுதான் முக்கிய காரணம். முன்பு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் தங்கள் பதவிக் காலத்தில்தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். ஆனால், இப்போது, அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவருமே குற்றச்சாட்டுகளுடனும், சர்ச்சைகளுடனும்தான் தேர்தலையே சந்திக்கின்றனர். இதில் வெல்லப்போவது ஹிலாரியா? டிராம்பா என்பது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரி ஜெயித்தால் அமெரிக்க சரித்திரத்தில் முதல் பெண் அதிபர் என்ற பெருமை பெறுவதோடு வெள்ளை மாளிகையில் குடியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
here are now only a few days left before America votes on its 45th President, with Hillary Clinton's polling lead over Donald Trump having narrowed significantly in recent days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X