For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பெண்.. ஆபரேஷன் செய்து அசத்திய அமெரிக்க மருத்துவர்கள்

தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளம்பெண்ணுக்கு 31 மணி நேரம் நடந்த முகம்மாற்று ஆபரேஷன் மூலம் ஆளையே அமெரிக்க டாக்டர்கள் மாற்றிக்காட்டியுள்ளனர்.

By Rajeswari
Google Oneindia Tamil News

Recommended Video

    முகத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பெண்-வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளம்பெண்ணுக்கு 31 மணி நேரம் நடந்த முகம்மாற்று ஆபரேஷன் மூலம் ஆளையே அமெரிக்க டாக்டர்கள் மாற்றிக்காட்டியுள்ளனர்.

    அமெரிக்காவை சேர்ந்த கேத்தி ஸ்டபல்பீல்ட் என்ற பெண் 2014-ம் ஆண்டு தற்கொலை செய்ய முடிவெடுத்து தன் கையாலே தனது முகத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். காதல் தோல்வி காரணமாக அவர் இப்படி செய்துள்ளார்.

    அவர் உயிர் பிழைப்பதே முடியாத காரியமாக இருந்தது. அவரது முகத்தில் பலத்த காயங்கள் இருந்தன குறிப்பாக நெற்றி, கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகள் சிதைந்து போனது.

    மூன்று ஆண்டு சிகிச்சை

    மூன்று ஆண்டு சிகிச்சை

    அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை மூன்று ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கேத்தி. இவருக்கு பல இடங்களில் இருந்து நன்கொடைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அவரது உயிர்க்கு எந்த வித ஆபத்து இல்லவிட்டாலும் , அவரது முகம் சிகிச்சைக்கு பின்னர் சிதைந்த விட்டது அதை பார்த்து அவர் மிக துயரத்துக்கு ஆளானார்.

    தானம்

    தானம்

    இதனால், கேத்தியின் முகத்தை சரி செய்யவேண்டும் என்றால் யாராவது முகத்தை தானமாக கொடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இதனால் மருத்துவர்கள் கேத்தியின் பெயரை பதிவு செய்து வைத்தனர். இதைத்தொடர்ந்து அதிகமான போதைப் பொருள் உட்கொண்டதில் உயிரிழந்த பெண் ஒருவரின் முகம் கேத்திக்கு தானமாக தரப்பட்டது .

    யார் கொடுத்தது

    யார் கொடுத்தது

    கேத்திக்கு முகம் தானம் கொடுத்த பெண்ணின் பெயர், ஆட்ரே. அதிக போதை பொருள் பழக்கத்தால் இவர் மரணம் அடைந்தார். உடல் தானம் செய்ய அனுமதி அளித்து இருந்த இவரின் முகத்தில் இருந்த சதைகள் எடுக்கப்பட்டது. அதை வைத்துதான் கேத்திக்கு புதிய முகம் அளிக்கப்பட்டது.

    பெரிய சாதனை

    பெரிய சாதனை

    இதையடுத்து, சுமார் 31 மணி நேரம் நடந்த இந்த ஆபரேஷனுக்கு பிறகு கேத்தியின் முகம் சீமைக்கப்பட்டது. தனக்கு பெரிய மன உறுதி அளித்துள்ளது என்றும் தான், புதிய வாழ்க்கையை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.தனது 21 வயதில் முழு முகத்தை மாற்று சிகிச்சையின் மூலம் பெற்ற இளைய அமெரிக்கர் என்ற சிறப்பும் கேத்திக்கு கிடைத்துள்ளது.

    English summary
    US woman who shot herself with a hunting rifle. Later she gets the face transplant. She is the youngest person to get a face transplant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X