மீண்டும் தாக்குதல்? - உக்ரைனில் நிறுத்தப்பட்ட எச்சரிக்கை ஒலி மீண்டும் ஒலித்தது!
கிவி: உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் எச்சரிக்கை ஒலி உக்ரைன் தலைநகரில் ஒலிக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று ஐந்தாவது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருக்கின்றன.

அதனடிப்படையில் இன்று மதியம் இந்த பேச்சு வார்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அமைதி பேச்சுவார்த்தை நடக்க இருப்பதால், போருக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
கடந்த ஐந்து நாட்களாக உக்ரைனில் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று அமைதி பேச்சு வார்த்தை நடக்க இருந்ததால், தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டது. தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் மக்களும் வெளியே வரலாம் என்று கூறப்பட்ட நிலையில் மீண்டும் ஒலி எழுப்பபட்டுள்ளது. இதனால் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
மீண்டும் ஒலி எழுப்பப்பட்டதால், வான் வழி தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகிறதா என்ற கோணத்திலும் உக்ரைன் யோசித்து வருகிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மீண்டும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை ரஷ்யா அழைப்பிற்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றுள்ளனர். ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் மிதான தாக்குதலை ரஷ்யா குறைந்துள்ளதாக தெரிகிறது. போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதம் வழங்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications