For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டோங்கோவில் கடலுக்குள் வெடித்த எரிமலையால் சுனாமி.. அமில மழை பெய்யவும் வாய்ப்பு! பரபர வீடியோ

Google Oneindia Tamil News

டோங்கோ: பசிபிக் பகுதியில் இடம்பெற்றுள்ள டோங்கா நாட்டில் எரிமலை வெடிப்பு காரணமாகச் சுனாமி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    டோங்கோவில் கடலுக்குள் வெடித்த எரிமலையால் சுனாமி.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

    டோங்கா என்பது பசிபிக் ஓசியான பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடாகும். மொத்தம் 177 சிறு தீவுகளைக் கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 1.03 லட்சம் ஆகும்.

    இன்று எரிமலை வெடிப்பதைத் தொடர்ந்து இந்த நாட்டின் சில தீவுகளில் சுனாமி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கருப்பாக மாறிய வானம்.. டோங்காவில் சுனாமி ஏற்படும் முன்.. கடலில் என்ன நடந்தது தெரியுமா? பரபர வீடியோ கருப்பாக மாறிய வானம்.. டோங்காவில் சுனாமி ஏற்படும் முன்.. கடலில் என்ன நடந்தது தெரியுமா? பரபர வீடியோ

    எரிமலை

    எரிமலை

    பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கோ. இங்கு நீருக்கு அடியே உள்ள எரிமலை ஒன்று சமீபத்தில் வெடித்துச் சிதறியது. இதனால் சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியுள்ளது. அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் சாட்டிலைட் கூட படம் பிடிக்கும் அளவுக்கு அங்கு கரும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. The Hunga Tonga Hunga Ha'apai volcano என்ற இந்த எரிமலை டோங்கோ தலைநகரில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

    சுனாமி

    சுனாமி

    இந்த எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து டோங்கோ மற்றும் அமெரிக்கா பிராந்தியமான அமெரிக்க சமோவா பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், டோங்கா நாட்டில் சில பகுதிகளில் ஏற்கனவே சுனாமி தாக்கத் தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2 அடி உயரமுள்ள அலைகள் டோங்கோவின் சில தீவுகளைத் தாக்கியுள்ளதாக உறுதிபடுத்தப்படதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

     அமில மலை எச்சரிக்கை

    அமில மலை எச்சரிக்கை

    அதில் கடல் அலைகள் கோங்கோவின் குடியிருப்புகளை அடித்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. அதேபோல தேவாலயம் போல இருக்கும் கட்டிடம் ஒன்றிலும் கடல் அலை உள்ளே புகுந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இருப்பினும், இது தொடர்பாக இதுவரை அந்நாட்டில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ளூர் விமான சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், எரிமலை வெடிப்பு காரணமாக எங்கு அமில மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     அண்டை நாடுகள்

    அண்டை நாடுகள்

    அதேநேரம் அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. அதேநேரம் நியூசிலாந்து வல்லுநர் குழு சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக Hunga Tonga எரிமலை வெடித்த போது மிகப் பெரியளவில் அழுத்தம் வெளியேறியதாகவும் அதன் ஒலி நியூசிலாந்து முழுவதும் கேட்கப்பட்டதாகவும் நியூசிலாந்தின் WeatherWatchNZ தெரிவித்துள்ளது.

    English summary
    Waves are hitting Tonga after a volcano tsunami warning was put in place on Saturday evening. Tsunami waves are hitting Ocean island country
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X