அணுஆயுதங்களை தொடர்ந்து தயாரிப்போம்.. முடிஞ்சத பாத்துக்குங்க.. அசராத வடகொரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பியாங்ஜியாங்: தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரிப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியது.

இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐநா பாதுகாப்பு சபையில் ஒருமனதாக நிறைவேறியது. 15 உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

வடகொரிய ஏற்றுமதி பாதிப்பு

வடகொரிய ஏற்றுமதி பாதிப்பு

இந்த பொருளாதார தடை, வடகொரியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களை குறிவைத்து கொண்டு வரப்பட்டது. இனி வடகொரியா இரும்பு தாது, கடல் உணவு போன்றவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது என கூறப்பபடுகிறது.

இறையாண்மைக்கு எதிரானது

இறையாண்மைக்கு எதிரானது

இதனால் அந்நாட்டுக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வடகொரியா, பொருளாதார தடை வடகொரியா இறையாண்மைக்கு எதிரானது என தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை மேசை

பேச்சுவார்த்தை மேசை

அமெரிக்காவில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது பேச்சுவார்த்தை மேசை மீது அணுகுண்டு ஆயுதங்களை வைக்க மாட்டோம் என்றும் வடகொரியா கூறியுள்ளது.

North Korea Again Made a Missile launch-Oneindia Tamil
பின்வாங்க மாட்டோம்

பின்வாங்க மாட்டோம்

எங்கள் அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் வடகொரியா தெளிவாக தெரிவித்துள்ளது. பொருளாதார தடை விதித்த நிலையிலும் வடகொரியா அடங்காமல் அணு ஆயுதங்களை தயாரிப்போம் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
North korea says that they will not stop atomic arms test. UN imposed economic ban on North Korea.
Please Wait while comments are loading...