For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் உள்நாட்டு போர்! நாடே பிளவுபடும்.. ரஷ்ய முன்னாள் அதிபர் பகீர்! இடையில் மஸ்க் வேற! பரபர

Google Oneindia Tamil News

மாஸ்கோ: அதிபர் ​​விளாடிமிர் புதினின் மிக நெருங்கிய நண்பரும் முன்னாள் ரஷ்ய அதிபருமான டிமிட்ரி மெத்வதே அடுத்தாண்டு என்ற நடக்கும் என்பது குறித்த சில சம்பவங்களைக் கணித்துள்ளார். அதில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்றும், எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக வருவார் என்பது போன்ற கணிப்புகளைப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 2022ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது. நாளை இரவு நாம் புத்தாண்டை வரவேற்கத் தயாராக உள்ளோம். கடந்த 2022ஆம் ஆண்டு உலகெங்கும் மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்தது.

குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த போர் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த பிப். மாதம் தொடங்கிய போர் 11 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்தப் போர் இப்போதைக்கு முடிவுக்கு வருவது போல எனத் தெரியவில்லை.

உக்ரைன் யுத்தத்தை நிறுத்த விரும்பும் ரஷ்யா.. தைவானை ஆக்கிரமிக்க 39 போர் விமானங்களை பறக்கவிட்ட சீனா உக்ரைன் யுத்தத்தை நிறுத்த விரும்பும் ரஷ்யா.. தைவானை ஆக்கிரமிக்க 39 போர் விமானங்களை பறக்கவிட்ட சீனா

முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதே

முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதே

இதற்கிடையே ரஷ்ய அதிபர் ​​விளாடிமிர் புதினின் மிக நெருங்கிய நண்பரும் முன்னாள் ரஷ்ய அதிபருமான டிமிட்ரி மெத்வதே அடுத்தாண்டு என்ற நடக்கும் என்பது குறித்த சில சம்பவங்களைக் கணித்துள்ளார். அவரது கணிப்புகள் மிகவும் கொடூரமானதாகவே உள்ளது.. 2023இல் என்னவெல்லாம் நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்றும், எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக வருவார் என்பது போன்ற கணிப்புகளை அவர் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க் சர்ச்சை

எலான் மஸ்க் சர்ச்சை

இதில் விஷயம் என்னவென்றால், இந்த கணிப்புகளுக்கு ட்விட்டரின் புதிய ஓனர் எலான் மஸ்க் ரிப்ளை செய்துள்ளார். இது மிகச் சிறப்பான ட்வீட் என்று பொருள்படும் வகையில் எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஏற்படும், அமெரிக்கா பிளவுபடும் என்றெல்லாம் அவர் கூறிய நிலையில், அதை எலான் மஸ்க் புகழ்ந்து கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. நெட்டிசன்கள் எலான் மஸ்க்கிற்கு எதிராகக் கடுமையாக எதிர்வினையாற்றினர். இதையடுத்து செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த புரிதல் இல்லாத நபரின் ட்வீட் இது என்றும் நக்கலாகவே அப்படிப் பதிவிட்டிருந்ததாகச் சொல்லிச் சமாளித்தார் எலான் மஸ்க்.

ஐரோப்பிய ஒன்றியம் சரியும்

ஐரோப்பிய ஒன்றியம் சரியும்

அது சரி அப்படி அவர் என்ன தான் சொன்னார் என்பதைப் பார்க்கலாம்.. டிமிட்ரி மெத்வதே தனது ட்விட்டரில், "2023ல் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பார்க்கலாம்.. 1. எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 150 டாலராகவும் ஆகவும், எரிவாயு விலை ஒரு க்யூபிக் மீட்டர் 5 டாலராகவும் ஆகவும் உயரும்.. 2) இங்கிலாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும்.. 3) இங்கிலாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த உடன் ஐரோப்பிய ஒன்றியம் சரியும். யூரோ ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயம் என்ற நிலை மாறும். 4) போலந்தும் ஹங்கேரியும் முன்பு இருந்த உக்ரைனின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமிக்கும்.

ஐரோப்பாவில் போர்

ஐரோப்பாவில் போர்


5) ஜெர்மனி, போலந்து, பால்டிக் நாடுகள், செக்கியா, ஸ்லோவாக்கியா, கியேவ் குடியரசு மற்றும் நாடுகளை உள்ளடக்கிய நான்காவது ரீச் உருவாக்கப்படும். 6) பிரான்சிற்கும் இந்த நான்காவது ரீச்சிற்கும் இடையே போர் வெடிக்கும். ஐரோப்பா பிளவுபடும்.. போலந்து பிரிவினையை நோக்கித் தள்ளப்படும். 7) வடக்கு அயர்லாந்து இங்கிலாந்தில் இருந்து பிரிந்து அயர்லாந்து குடியரசில் இணையும்

அமெரிக்கா பிளவுபடும்

அமெரிக்கா பிளவுபடும்

8) அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும். அதன் விளைவாக டெக்சாஸ் சுதந்திர நாடாக மாறும்.. டெக்சாஸ் மற்றும் மெக்சிகோ இணைந்து கூட்டணி அரசை உருவாக்கும். உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, அங்கு நடக்கும் அதிபர் தேர்தலில் வென்று எலான் மஸ்க் மஸ்க் அதிபராகத் தேர்வாவார். 9) அனைத்து மிகப்பெரிய பங்குச் சந்தைகளும் நிதி நிறுவனங்களும் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் விட்டு வெளியேறி ஆசியாவிற்குச் செல்லும்

பரபர கணிப்புகள்

பரபர கணிப்புகள்

10) பிரெட்டன் வூட்ஸ் பண மேலாண்மை அமைப்பு சரிந்து, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். யூரோ மற்றும் டாலர் உலகளாவிய இருப்பு நாணயங்களாக இருக்கும் நிலையில், அந்த நிலை மாறும்.. அதற்குப் பதிலாக டிஜிட்டல் ஃபியட் நாணயங்கள் பயன்பாடு அதிகரிக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இவையெல்லாம் நடக்க வாய்ப்புகள் ரொமப்வே குறைவு என்றாலும் கூட முன்னாள் அதிபர் இப்படிக் கணித்துள்ளது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

English summary
Russian ex President Dmitry Medvedev predicts US will have civil war in 2023: Elon Musk will be president soon says Dmitry Medvedev
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X