For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் சூட்சமம்.. வித்தை காட்டிய இங்கிலாந்து! கத்திய ரோஹித்.. ஆனால் கடைசியில் நடந்த "அந்த" ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

அடிலெய்டு: இந்தியாவிற்கு எதிரான செமி பைனல் டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்தது. டாப் பவுலர் இல்லை என்றாலும் அந்த அணி ஸ்மார்ட்டாக திட்டம் ஒன்றை வகுத்து இருந்தது.

2022 டி 20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நியூசிலாந்துக்கு எதிரான செமி பைனல் போட்டியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் பைனல் சென்றது.

இன்று இந்தியா - இங்கிலாந்து இடையிலான செமி பைனல் மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

உலககோப்பை டி20: பாகிஸ்தான்-ஜிம்பாப்வே ரசிகர்கள் திடீர் மோதல்.. காரணம் மிஸ்டர் பீன்.. ஒரே காமெடி உலககோப்பை டி20: பாகிஸ்தான்-ஜிம்பாப்வே ரசிகர்கள் திடீர் மோதல்.. காரணம் மிஸ்டர் பீன்.. ஒரே காமெடி

இந்தியா

இந்தியா

இன்று ஆடும் இந்திய அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. கடந்த போட்டி போல இன்றும் ரிஷப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா(கேட்ச்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்(வ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று ஆடும் இந்திய அணியில் இடம்பெற்றனர். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் இடம்பெறவில்லை. மாறாக ஜோர்டன் அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டார்.

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணி பேட்டிங்

இந்தியா தொடக்கத்திலேயே பவுண்டரியோடு பேட்டிங்கை தொடங்கியது. ஆனாலும் கே.எல் ராகுல் வெறும் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் கோலி, ரோஹித் இருவருமே மிகவும் பொறுமையாக ஆடினார்கள். இரண்டு பேருமே பெரிய ஷாட் அடிக்க முயன்றனர். ஆனால் அடிக்க முடியவில்லை. கோலி மட்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் ரோஹித்தால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை. அவருக்கு சரியாக பால் கையில் மாட்டவில்லை.

ஸ்மார்ட் கேம்

ஸ்மார்ட் கேம்

இதில் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்மார்ட் கேம் ஆடினார்கள். பொதுவாகவே ஜோர்டான் ஸ்லோ பால் போடுவார். இன்றும் அவர் ஸ்லோ யார்க்கர் வீசினார். அதேபோல் ஸ்பின் பவுலர்களும் மிகவும் மெதுவாக போட்டனர். இவர்கள் மெதுவாக அவுட் சைடில் பந்து வீசியதை இந்திய பேட்ஸ்மேன்களால் சரியாக அடிக்க முடியவில்லை. ஆப்ஸைட் பவுண்டரி தூரமாக இருந்ததால் இந்திய பேட்ஸ்மேன்களால் சிக்ஸ், பவுண்டரி அடிக்க முடியவில்லை.

ஸ்லோ பால்

ஸ்லோ பால்

இந்த ஸ்லோ பால் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினார்கள். முக்கியமாக ரோஹித் சர்மா பந்து சரியாக மாட்டாமல் இடையில் இடையில் கோபமாக கத்தினார். அவர் 28 பந்துக்கு 27 ரன்கள் எடுத்து அவுட்டான பின் ஸ்கையும் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆட பார்த்தார். ஆனாலும் அவருக்கு பந்து சரியாக மாட்டவில்லை. இதன் காரணமாக அடில் ரஷீத் ஓவரில் அவரும் அவுட் ஆனார்.

நெருக்கடி

நெருக்கடி

16 ஓவர்கள் வரை இந்திய அணிக்கு இதனால் நெருக்கடி நிலவியது. அதிகபட்சம் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் எடுக்கவே முடியவில்லை. ஆனால் அதன்பின் 17வது ஓவரில்தான் 11 ரன்கள் சென்றது. பின்னர் மீண்டும் 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை ஹர்திக் பாண்டியா அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் சென்றது. அதன்பின் 19வது ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் சென்றது. கடைசி பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி சென்றது. இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் சென்றது.அதன்பின் கடைசி ஓவரில் மட்டும் 12 ரன்கள் சென்றது. இதன் மூலம் ஹர்திக் பாண்டியா 33 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 168/6 ரன்கள் எடுத்தது.

English summary
What happened during the India batting against England in Semi Final T 20 world cup?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X