• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

21 வயதில் அரிய நோயால் தாக்கப்பட்டாலும் தன்னம்பிக்கை நாயகனாக திகழ்ந்த ஹாக்கிங்

By Gajalakshmi
|

லண்டன் : ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இன்று உலகை விட்டு மறைந்திருக்கிறார். யார் ஸ்டீபன் ஹாக்கிங் அவர் செய்த சாதனைகள் என்ன?

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவருடைய தந்தையும் ஒரு இயற்பியலாளர், வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆய்வை இவர் செய்தார். ஸ்டீபனின் தாயார் லிபரெல் கட்சியில் இருந்தார்.

இவரின் பெற்றோர் நல்ல கல்வி பின்புலத்தை கொண்டவர்கள், ஸ்டீபனுக்கு 4 உடன்பிறந்தவர்களும் உள்ளனர். பள்ளி சென்று பாடங்கள் படிக்காமல் எப்போதும் தன்னை சுற்றி புத்தகங்களை வைத்துக் கொண்டு பிடித்தவற்றை படித்து வளர்ந்தவர் ஸ்டீபன். இதனாலேயே ஸ்டீபனை அவரது நண்பர்கள் ஐன்ஸ்டீன் என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர்.

புத்தகங்களே வாழ்க்கையாக இருந்த ஸ்டீபன்

புத்தகங்களே வாழ்க்கையாக இருந்த ஸ்டீபன்

1962ம் ஆண்டில் பட்டதாரியான ஸ்டீபன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சேர்வதற்காக இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இயற்பியல் என்பது எப்போதுமே ஒரு போரான பாடமாகத்தான் பள்ளி காலங்களில் இருந்தது. ஆனால் வேதியியல் மிகவும் பிடித்தமானதாக இருக்கும், ஏனெனில் அதில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும் என்று ஹாக்கிங் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இயற்பியலும், வானியலும் நாம் எங்கிருந்து வந்தோம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்பதற்கான புரிதல்களை ஏற்படுத்தும். அண்டம் பற்றி ஆழமாக தெரிந்து கொள்வதே என்னுடைய விருப்பம் என்றும் ஸ்டீபன் கூறி இருக்கிறார்.

என்னென்ன ஆய்வுகள் செய்தார்?

என்னென்ன ஆய்வுகள் செய்தார்?

இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளைகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கியவை. கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இந்த வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.

பேச்சு, உடலின் செயல்பாடுகள் முடக்கம்

பேச்சு, உடலின் செயல்பாடுகள் முடக்கம்

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார் ஹாக்கிங்ஸ். குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினி வழியாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராக திகழ்ந்ததோடு வீல் சேரில் இருந்தவாறே பிறருக்கான உந்து சக்தியாகவும் இருந்தார்.

பிரபல புத்தகங்கள்

பிரபல புத்தகங்கள்

அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time),The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Who is Stephen hawking and what was his childhood days? here is the biography of the scientist's life history

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more