For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலவிற்கு உரிமையாளர் யார்? தொடரும் சர்ச்சை.. அறிஞர்கள் அளிக்கும் அடடே பதில்!

நிலவிற்கு யார் உரிமையாளர் என்ற விவாதம் தற்போது உலகம் முழுக்க எழுந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நிலவிற்கு உரிமையாளர் யார்?...தொடரும் சர்ச்சை..வீடியோ

    நியூயார்க்: நிலவிற்கு யார் உரிமையாளர் என்ற விவாதம் தற்போது உலகம் முழுக்க எழுந்து இருக்கிறது. நிலவில் கொடி நாட்டியதன் மூலம், அமெரிக்கா நிலவிற்கு உரிமை கோர முடியுமா என்ற விவாதம் எழுந்து இருக்கிறது.

    உலகம் முழுக்க 90 களின் தொடக்கத்தில் காலணி ஆதிக்கம் உச்சத்தில் இருந்த போதும், முதல், இரண்டாம் உலகப் போர் என்று உலக நாடுகள் தங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொண்டு இருந்த போதும், ஒரு நாடு உலகின் எதாவது ஒரு பகுதியில் கொடியை நாட்டினால், அந்த பகுதி அந்த நாட்டிற்கு சொந்தமாகும் என்ற விதி இருந்தது. இந்தியா கார்கில் போரில் கூட அப்படித்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த விதிமுறை நிலவிற்கு பொருந்துமா என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. பூமியில் இனியும் கொடி நாட்டுவது உரிமை கோரலாக இருக்காது என்ற போதிலும், நிலவிற்கு அந்த விதி பொருந்துமா என்ற கேள்வி எழும்பி இருக்கிறது.

    கொடி பறக்குதா?

    கொடி பறக்குதா?

    1969 ஜூலை 21ல் நிலவில் நாசாவின் அப்போலோ 11 இறங்கியது. பின் உலக வரலாற்றில் முதல்முறையாக நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆல்ட்ரின் கால் பதித்தார். அந்த அழகான தருணத்தை அவர்கள் வீடியோவும் எடுத்தனர். அதோடு நிலவில் அவர்கள் அமெரிக்க கொடியையும் நட்டனர்.

    பிரச்சனை என்ன

    பிரச்சனை என்ன

    இந்தநிலையில் அதற்கு பின் சிலர் நிலவிற்கு சென்றாலும், இந்தியா போன்ற நாடுகள் நிலவில் ஆராய்ச்சி நடத்தினாலும், நிலவிற்கு அமெரிக்காதான் உரிமையாளர் என்று பிம்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சில அமெரிக்க நாட்டுக்காரர்களே இதை பரப்பி வருகிறார்கள். காலணி ஆதிக்க விதிப்படி, நிலவில் கொடியை நட்டதால், இனி நிலவு அமெரிக்காவிற்கு சொந்தமானது என்று விளக்கம் அளித்து வருகிறார்கள். கடந்த 10 வருடமாக வலுத்து இருக்கும் இந்த வாதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இந்த பாரம்பரிய விவாதத்திற்கு தற்போது அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா- லிங்கன் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த பல்கலையில், விண்வெளி சட்டத்துறை பேராசிரியராக இருக்கும் பிரான்ஸ் வோர் டென், விண்வெளி சட்டத்தின்படி, விண்வெளியில் இருக்கும் இயற்கையான பொருட்களை எதையும் யாரும் உரிமை கொள்ள முடியாது, அதேபோல் விண்வெளியில் கொடியை நாட்டுவது காலனி ஆதிக்கமாக கருத்தப்படாது என்று விளக்கம் அளித்துள்ளார். இதனால் நிலவிற்கு யாரும் உரிமையாளர் இல்லை என்றுள்ளார்.

    ஆனாலும் முடியும்

    ஆனாலும் முடியும்

    ஆனால், அதேசமயம் நிலவை அமெரிக்கா உரிமை கொள்ள நினைத்தால் வேறு விதமாக உரிமை கொள்ள முடியும். நிலவில் ஆதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் ஒப்புதலுடன், அகில உலக சட்டம் ஒன்றை இயற்றி நிலவிற்கு உரிமை கோர முடியும் என்றுள்ளார். அதன்பின் நிலவிற்கு அமெரிக்க அனுமதியுடன் மட்டுமே செல்ல முடியும் என்று விதியை மாற்ற முடியும். ஆனால் அது பெரிய உலக பிரச்னைக்கு வழிவகுக்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    English summary
    University of Nebraska-Lincoln explains that no one in the world including US cant own Moon as their property.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X