இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு.. ஒரே வாரத்தில் 7% தொற்று உயர்வு.. எச்சரிக்கும் புள்ளி விவரம்
ஜெனீவா: நாடு முழுவதும் 135 நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் 200 மில்லியனைத் தாண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்தியாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடு பாதிப்பு 135 நாடுகளில் பதிவாகியுள்ளன. 132 நாடுகள் பீட்டா மாறுபாடு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. 18 நாடுகளின் காமா கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
182 நாடுகளில் ஆல்பா மாறுபாடு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதுவும் உலகளாவிய புதிய வழக்குகளின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகரித்து வருகிறது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

4 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்பு
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரை மட்டும் உலகளவில் 4 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. டெல்டா மாறுபாட்டின் பரவலால் தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இறப்புகளின் வேகத்தை பொறுத்தவரை ஓரளவு பரவாயில்லை என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியங்களில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் முறையே 37 சதவீதம் மற்றும் 33 சதவீதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

புள்ளி விவரங்கள்
தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே வெளியில் ஒட்டுமொத்தமாக, இந்த வாரத்தில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைந்துள்ளது.64,000 க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் ஊறுகின்றன.

200 மில்லியனை தாண்டும்
இருப்பினும் மேற்கு பசிபிக் மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிகள் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது முறையே 48 சதவீதம் மற்றும் 31 சதவீதம் என்ற அளவில் இறப்புகள் அதிகரித்துள்ளன.கொரோனா மொத்த பாதிப்பு 197 மில்லியனாகவும், ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கை 4.2 மில்லியனாகவும் இருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் உலக நாடுகளில் பதிவாகும் பாதிப்புகளின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் 200 மில்லியனைத் தாண்டும் என்று புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தகவல் கொடுக்கின்றன.

இந்தோனேசியாவில் குறைவு
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இங்கு கடந்த வாரத்தில் மட்டும் பாதிப்புகள் 9 சதவீதம் அதிகரித்து 5,43,420 ஆக இருக்கிறது. இந்தியா ஒரு வாரத்தில் 2,83,923 புதிய பாதிப்புகள் ஏற்பட்டு 7% அதிகரித்துள்ளது. சமீப காலங்களில் அதிக கொரோனவை எதிர்கொண்ட இந்தோனேசியாவில் ஆறுதல் அளிக்கும்படியாக கடந்த வாரத்தில் 2,73,891 புதிய பாதிப்புகள் ஏற்பட்டு 5 சதவீதம் குறைவாக உள்ளது.

ஈரானில் அதிகரிப்பு
பிரேசில் நாட்டிலும் கடந்த ஒரு வாரத்தில் 47,830 பாதிப்புகளுடன் 2.24 சதவீதம்குறைந்துள்ளது, அதே வேளையில் ஈரானில் 2,06,722 புதிய பாதிப்புகளுடன் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது புதிய பாதிப்புகள்(8,41,000 பாதிப்புகள்) 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வாராந்திர உயிரிழப்புகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைப் போலவே 22,000 இறப்புகள் என்ற நிலையில் தொடருகிறது.
Recommended Video

உயிரிழப்பில் இந்தியா ஆறுதல்
இந்தியாவில் 1,00,000 க்கு 20.6 பேர் என்ற எண்ணிக்கையில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தோனேசியாவில் 1,00,000-க்கு 100.1 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டில் 1,00,000 க்கு 169.1 என்ற புதிய பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை கடந்த ஒரு வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது. அதாவது 1,00,000 க்கு ஒரு புதிய இறப்பு என்று உயிரிழப்பு விகிதம் 45 சதவீதம் குறைவாக இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications