For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஆப்கனுக்கு தொடரும் கடைசி இடம்.. ஆனால் காரணம் தாலிபான்கள் இல்லையாம்!

Google Oneindia Tamil News

காபூல்: தாலிபான்களுக்கு முன்னரே கூட, உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இடம் பெற்று வந்தது.

உலகெங்கும் இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆண்டுதோறும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பொதுவாக இதுபோன்ற பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் தான் முதல் இடத்தில் இருக்கும்.

அதேபோல பின்லாந்து தான் 5ஆவது ஆண்டாக இந்தாண்டும் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல் இந்தியா 136ஆவது இடத்தை பிடித்துள்ளது.

'அதை வாயிலையே வைக்க முடியல' பாகிஸ்தானுக்கு குட்டு.. இந்தியாவுக்கு பாராட்டு! ஓப்பனாக விளாசிய தாலிபான்'அதை வாயிலையே வைக்க முடியல' பாகிஸ்தானுக்கு குட்டு.. இந்தியாவுக்கு பாராட்டு! ஓப்பனாக விளாசிய தாலிபான்

 மகிழ்ச்சியற்ற நாடுகள்

மகிழ்ச்சியற்ற நாடுகள்

149 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. லெபனான் இந்த மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள நிலையில், போட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் உள்ளது. தனிநபர் ஜிடிபி, சமூகப் பாதுகாப்பு, ஆயுட்காலம், வாழ்க்கைத் தேர்வுகள், தாராள மனப்பான்மை உள்ளிட்ட 6 தரநிலைகளை வைத்து இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 6 தரநிலைகளிலும் ஆப்கானிஸ்தான் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.

 ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கனில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பமான சூழலே நிலவி வந்துள்ளது. தாலிபான் வருகைக்கு முன்னர், கடந்த 2001 முதல் ஆப்கனில் அமெரிக்கா பல முதலீடுகளைச் செய்து வந்துள்ளது. கடந்த 2002 முதல் ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிக்காக அமெரிக்கா மட்டும் $145 பில்லியன் செலவிட்டுள்ளது. இருந்தாலும் கூட ஆப்கனில் குழப்பமான ஒரே சூழலே நிலவி வந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வேயில் கூட பெரும்பாலான ஆப்கன் மக்கள் தங்கள் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலேயே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 நம்பிக்கை

நம்பிக்கை

அதிகரிக்கும் ஊழல், வறுமை, வேலையின்மை, வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்ட மக்களின் நிலை அதிகரிப்பு மற்றும் ஒழுங்கற்ற வளர்ச்சி ஆகியவை தான் இந்த மோசமான நிலைக்குக் காரணம். கடந்த 2001இல் தாலிபான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அமெரிக்கா ஆதரவுடன் மக்களாட்சி அமைந்த போது, அங்குப் பலரும் நம்பிக்கை உடனேயே இருந்தனர். ஆனால், சில ஆண்டுகளிலேயே நிலைமை மாற தொடங்கியது.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஆப்கன் போர் மீது அமெரிக்கா ஆர்வம் செலுத்திய அளவுக்கு ஊழல் தொடர்பாகவும் நாட்டை மறுகட்டமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தவில்லை என்றும் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்ததால் அங்கு மகிழ்ச்சியற்ற நிலை தொடர்ந்தது. இதன் காரணமாகவே தாலிபான் ஆட்சி அமைக்கும் முன்னரே கூட, ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் இருந்தது.

 நடவடிக்கை

நடவடிக்கை

இப்போது தாலிபான்கள் அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆப்கன் மக்களுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் சரிந்துவிட்டது. அங்கு மக்களிடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்து வரும் நிலையில், இதை குறைக்க ஆப்கன் ஆட்சியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்தப் பட்டியலில் ஆப்கான் கடைசி இடத்திலேயே தொடரும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Afghanistan is the unhappiest country in the world, even before the Taliban swept to power: Reason why Taliban is the most unhappiest country in World Happiness report .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X