புடின் "மைண்ட்கேம்".. உக்ரைன் ராணுவத்தை வைத்தே அந்நாட்டு அதிபரை கொல்ல திட்டம்? இறக்கப்பட்ட உளவாளிகள்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டு அதிபரை அந்த நாட்டு ராணுவத்தை வைத்தே கொலை செய்ய அல்லது ஆட்சியை கவிழ்க்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக ரஷ்ய அதிபர் புடின் வெளிப்படையான கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் - ரஷ்யா போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைன் நேட்டோ நாடு இல்லை என்பதால் இந்த போரில் தலையிட அமெரிக்கா மறுத்துவிட்டது. அமெரிக்க படைகள் ரஷ்யாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்காது என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில்தான் ரஷ்யா தற்போது உக்ரைன் உள்ளே வேகமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளே ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மைண்ட்கேம்
இந்த நிலையில் உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமர் சொலென்ஸ்கியை அந்நாட்டு ராணுவமே எதிர்க்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி வோலோடிமர் சொலென்ஸ்கியை அந்நாட்டு ராணுவமே எதிர்த்து, ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று ரஷ்யா அதிபர் புடின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் வைத்துள்ள கோரிக்கையில், உக்ரைன் அரசை உக்ரைன் ராணுவம் கவிழ்க்க வேண்டும்.

உக்ரைன் ராணுவம்
உங்கள் நாட்டை ஒரு நியோ நாசி ஆண்டு கொண்டு இருக்கிறார். அவர் உக்ரைன் வலதுசாரி. அவரை ஆதரிக்காதீர்கள். அவர்கள் உங்கள் குழந்தைகளை நாசம் செய்து விடுவார்கள். உங்கள் வீட்டு பெண்கள், முதியவர்களை அவர்களால் காப்பாற்ற முடியாது. அதனால் ராணுவமே அங்கு ஆட்சியை கைப்பற்றி, அரசை கவிழ்க்க வேண்டும். உங்கள் கையில் பவரை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆட்சி
அங்கு ராணுவ ஆட்சி நடந்தால் ரஷ்ய அரசு பேச்சுவார்த்தை நடத்தும். நாம் ஒரு விதமான ஒப்பந்தத்திற்கும் வர முடியும். உக்ரைனில் இருக்கும் ரஷ்ய மக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் மிகவும் தைரியமாக, ஹீரோ போல செயல்பட்டு வருகிறார்கள். ரஷ்யாவின் உயர் மட்ட கமிட்டியை நாங்கள் உக்ரைனுக்குள் அனுப்ப தயார். அங்கு உக்ரைனுடன் பேச தயார். ஆனால் உக்ரைன் அரசு எங்களிடம் பேசுமா என்று தெரியாது.

உக்ரைன் ராணுவம்
உக்ரைனில் ராணுவ ஆட்சி நடந்தால் பேச்சுவார்த்தை நடத்த, ஒப்பந்தம் செய்ய வசதியாக இருக்கும், என்று புடின் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இதை புடின் ஆடும் மைண்ட் கேம் என்று உலக நாட்டு அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி உக்ரைன் அரசை கவிழ்த்து அந்நாட்டு அதிபர் வோலோடிமர் சொலென்ஸ்கியை அந்நாட்டு ராணுவத்தை வைத்தே கொலை செய்ய புடின் திட்டமிட்டு உள்ளார். உக்ரைன் ராணுவம் - அரசு இடையே பிரிவினையை ஏற்படுத்த புடின் பிளான் போட்டு இருக்கிறார்.

சிக்கல்
இதற்கு உக்ரைன் ராணுவம் அடிபணிந்துவிட கூடாது. அது பெரிய பாதிப்பில் முடியும். ஏற்கனவே உக்ரைனில் ரஷ்யாவின் உளவாளிகள் உள்ளனர். எப்எஸ்பி உளவாளிகள் உக்ரைன் முழுக்க உள்ளனர். அவர்கள் ஆட்சியை கவிழ்க்க உள்ளே இருந்து முயன்று வருகிறார்கள். ராணுவத்திற்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளே இருந்து ஆட்சியை கவிழ்த்து, அதன்பின் உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வரும். அல்லது பொம்மை அரசை அங்கு ரஷ்யா நிறுவும் என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications