அட.. இந்தியாவுக்கு ஒரு நாள் முன்பே பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட இதுதான் காரணமா? எல்லாம் "டைம்"
பாகிஸ்தான் தனது 75 வது சுதந்திர தினத்தை சனிக்கிழமையான இன்று கொண்டாடி வருகிறது. இந்திய சுதந்திர சட்டம், 1947-ன்படி, அந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் ஏன் பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14 அன்று அனுசரிக்கிறது, ஆகஸ்ட் 15ம் தேதி ஏன் கொண்டாடுவதில்லை?
பல ஆண்டுகளாகவே இந்த கேள்வி சுற்றி வருகிறது.
இந்த கேள்விக்கு பதிலளிக்க பல வகை கருத்துக்களை பலரும் சொல்கிறார்கள். அவற்றில் சில இதோ:

கராச்சியில் அதிகார மாற்றம்
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டன், பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை அதன் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவுக்கு ஆகஸ்ட் 14, 1947 அன்று கராச்சியில் வைத்து மாற்றினார். ஆகஸ்ட் 15 இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடாக மாறும் தேதி என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 14ல், அதிகார பரிமாற்றம் நடந்ததால் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 ஐ தனது சுதந்திர தினமாக ஏற்றுக்கொண்டது.

லியாகத் அலிகான் அமைச்சரவை
1948 ஜூன் மாதம், பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவிற்கு முன்பாக நாடு தனது சுதந்திர தினத்தை கொண்டாட முன்மொழியப்பட்டது. இந்த யோசனை ஜின்னாவின் ஒப்புதலுக்காக கொண்டு செல்லப்பட்டு ஏற்கப்பட்டது. எனவே பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதில் அவர்களுக்கு ஒரு பெருமை போல.

மத காரணம்
இதில், மதமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 மற்றும் 15ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு, ரமலானின் 27 வது நாளுடன் ஒத்துப்போனது, இது புனித மாதத்தின் ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது. எனவே, ஆகஸ்ட் 14 சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது.

கடிகாரமும் ஒரு மேட்டர்
இந்திய நேரம், பாகிஸ்தான் நேரத்தை விட (பிஎஸ்டி) 30 நிமிடங்கள் முன்னால் இருப்பதும் ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திர நாடாக மாறியதால், பாகிஸ்தானில் உள்ளூர் நேரம் ஆகஸ்ட் 14 அன்று இரவு 11:30 மணியாக இருந்தது. எனவே இந்த தேதியில் அதன் சுதந்திரத்தை கொண்டாடுகிறது என்றும் சொல்கிறார்கள்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications