அந்தோ பரிதாபம்! அமெரிக்காவை நம்பி போய் ஏமாந்த உக்ரைன்.. கடைசியில் கைவிட்ட பிடன்.. நோட் பண்ணீங்களா?
மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பற்றி நேற்று அமெரிக்க அதிபர் பிடன் பேசியது பெரிய அளவில் விவாதங்களை, சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நேற்று தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக போருக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. ரஷ்யா தீவிரமாக போர் பயிற்சிகளை செய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை போர் அறிவிக்கப்பட்டது. ரஷ்யா தற்போது உக்ரைன் தலைநகர் கிவிவ் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது.

அதிபர் பிடன்
அமெரிக்க அதிபர் பிடன் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், ரஷ்யா மீது ஏற்றுமதி தடைகளை விதிக்க போவதாக அறிவித்துள்ளார். பிற நாடுகளின் மீதான பொருளாதார தடையின் "முழு பேக்கேஜ்" ரஷ்யா மீது விதிக்கப்படும் என்று புடின் கூறியுள்ளார். முதல் கட்டமாக சில ரஷ்ய வங்கிகள், ரஷ்ய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளார். மொத்தமாக ரஷ்யாவின் பொருளாதாரம் முடங்கும் வகையில் வரும் நாட்களில் கூடுதல் தடைகளை அவர் விதிக்க இருக்கிறார்.

எச்சரிக்கை
இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்த பிடன் ரஷ்யா அத்துமீறி செயல்பட்டு வருகிறது. உலக அளவில் ரஷ்யா ஓரம்கட்டப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவிற்கு அரசியல் ரீதியாக சகோதரர்கள், நண்பர்கள் இல்லை. புடின் போரை தேர்வு செய்துள்ளார். அவர் செய்தது தவறு. ரஷ்யா பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி உள்ளது. ரஷ்யா பதில் சொல்லும். ரஷ்யா தனது செயலுக்கு விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று பிடன் அறிவித்துள்ளார்.

ஆனால் படைகள் அனுப்பவில்லை
ஆனால் ரஷ்யா மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்று பிடன் உறுதியாக அறிவித்துவிட்டார். அதாவது உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என்று பிடன் அறிவித்து இருக்கிறார். அதிலும் உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்களை, அகதிகளை மீட்க கூட படைகளை அனுப்ப மாட்டோம் என்று பிடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவும் - ரஷ்யாவும் நேரடியாக போரில் ஈடுபடவில்லை. அதனால் அமெரிக்கா படைகளை அனுப்பாது. ரஷ்யாவும் - அமெரிக்காவும் மாறி மாறி சுட்டுக் கொள்ளவில்லை என்று பிடன் தெரிவித்து உள்ளார்.

போர் வரும்
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பினால் அது போருக்கு வழி வகுக்கும். அதை விரும்பவில்லை. அமெரிக்கா மாறாக நேட்டோ நாடுகளை காக்கும். நேட்டோ நாடுகள் மீது ரஷ்யா தாக்கினால் அமெரிக்க உடனடியாக பதிலடி கொடுக்கும். நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று பிடன் கூறியுள்ளார். உக்ரைன் இன்னும் நேட்டோவில் இணையவில்லை. இதனால் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவாது என்று மறைமுகமாக பிடன் தெரிவித்துள்ளார்.

அச்சமா?
பிடனின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. முக்கியமாக பல நாள் பங்காளி ரஷ்யாவை பகைத்துக்கொண்டு அமெரிக்காவுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. அமெரிக்காவுடன் நட்பாகி உக்ரைன் நேட்டோவில் கூட இணையும் திட்டத்தில் இருந்தது. ஆனால் இப்போது திடீரென பிடன் உக்ரைனை கைவிடும் வகையில் பேசி இருக்கிறார். பிடன் ஒருவேளை ரஷ்யாவை பார்த்து அஞ்சிவிட்டாரோ, தனது தலைமைக்கு கீழ் போர் நடக்க கூடாது என்று பிடன் நினைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேட்டோ படைகளும் போகவில்லை
நேட்டோவில் இருக்கும் மற்ற படைகளும் உக்ரைனுக்கு உதவவில்லை. நேட்டோ வெளிப்படையாக உக்ரைனை ஆதரிக்கவில்லை. ரஷ்யாவை நேட்டோவில் இருக்கும் நாடுகள் எதிர்த்து உள்ளது. ஆனால் நேட்டோ என்று அமைப்பு வெளிப்படையாக ரஷ்யாவை இன்னும் எதிர்க்கவில்லை. மாறாக நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டிற்குள் படைகளை குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அமெரிக்காவும் பாதுகாப்பு கருதி நேட்டோ நாடுகளுக்கு படைகளை அனுப்பி உள்ளது.

டிரம்ப் கிண்டல்
மாறாக உக்ரைன் மட்டும் இதில் கைவிடப்பட்டுள்ளது. இதனால் புடின் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கிறார். பிடன்தான் முட்டாள் போல வீக்காக செயல்பட்டு இருக்கிறார் என்று டிரம்ப் என்று கிண்டல் செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் எப்படி தாலிபான்களிடம் வீழ்ந்ததோ அப்படியே இப்போது உக்ரைன் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளது. உக்ரைன் அமெரிக்காவையும், நேட்டோவையும் நம்பி ஏமாந்து உள்ளதாக அமெரிக்கர்களே விமர்சனம் வைக்க தொடங்கி உள்ளனர். ரஷ்யா என்ற பல நாள் நண்பனை, ரத்த உறவை பகைத்துக்கொண்டு.. அமெரிக்கா பின் சென்றதற்கான விலையை உக்ரைன் கொடுப்பதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications