• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமக்காக ஓடியாடி தகவல் திரட்டித் தரும் “விக்கி பீடியா” ஓனர் ஜிம்மி வேல்ஸ் பிறந்தநாள் இன்று!!

|

கூகுளுக்கு அடுத்தாக அனைத்து கம்யூட்டர் உலக வாசிகளுக்கு கைவந்த கலையாக திகழ்ந்து வருவது விக்கிபீடியாதான். இங்கு கிடைக்காத தகவல்களே இல்லை என்கின்ற அளவிற்கு தகவல்களின் களஞ்சியமாக அனைத்து மொழிகளிலும் திகழ்ந்து வருகின்றது.

ஆனால், அந்த விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸினை எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அவருடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 7ம் தேதியான இன்றுதான் என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

வரலாறுகளின் வரலாற்றை எடுத்துரைக்கும் ஜிம்மியின் அப்பா ஒரு பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைப் பார்த்தவர். ஆகஸ்ட் 7, 1966ல் பிறந்தார் ஜிம்மி. வீட்டிலேயே கல்வி பயின்றுகொண்டிருந்த ஜிம்மி வேல்ஸ் மாண்டிசேரி கல்வியால் படித்து வளர்ந்தவர்.

முதலில் போமிஸ்:

முதலில் போமிஸ்:

கல்லூரியில் பொருளாதாரம் படித்த ஜிம்மி, ஸ்டாக் எக்ஸேங்க் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்தார். அந்த வேலையின் தன்மை தன்னைக் கவராத காரணத்தினால் விலகிய அவர் நெட்ஸ்கேப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதுடன், கவர்ச்சிப் படங்களை தேடித்தரும் வகையிலான "போமிஸ்" என்ற தளத்தினை முதலில் நடத்தி வந்தார்.

கொஞ்சம் கஷ்டம்தான்:

கொஞ்சம் கஷ்டம்தான்:

கொஞ்ச காலத்திலேயே முதன்முதலாக "நு பீடியா" என்ற தளத்தினை ஜிம்மி வேல்ஸ் துவங்கினார். அதில் பல்வேறு அறிவு மற்றும் சிந்தனைகள் சார்ந்த அருமையான கட்டுரைகளை பதிவிட்டார். கொஞ்சம் கச்சடா பிடித்த வேலையாகத்தான் அது இருந்தது. கட்டிங், ஒட்டிங், எடிட்டிங் வேலைகளுக்கு திண்டாடி போய்விட்டார் ஜிம்மி.

யார் வேண்டுமானாலும்:

யார் வேண்டுமானாலும்:

திடீரென்று ஒருநாள் எடிசனின் டங்ஸ்டன் பல்பு ஜிம்மி மண்டையில் எரிந்தது. அவ்வளவுதான் தளத்தை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று யார் வேண்டுமானாலும் எழுதலாம்....எடிட் செய்யலாம் என்று விக்கிபீடியா எனப் பெயர் மாற்றம் செய்து அறிவித்தார்.

உயரத்தில் நிறுத்திய கட்டுரைகள்:

உயரத்தில் நிறுத்திய கட்டுரைகள்:

முதலில் காப்பி ரைட் பிரச்சனைகள் குறித்த பயம் எழுந்தாலும், மக்களின் கட்டுரை சப்போர்ட் அவரை பெரும் உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியது. விக்கி மீடியா என்ற அமைப்பின் மூலம் விக்கி பீடியாவிற்கான நிதியையும் திரட்ட ஆரம்பித்தார் ஜிம்மி.

விளம்பர கடுப்புகள் இல்லை:

விளம்பர கடுப்புகள் இல்லை:

ஆனால், மனிதர் தெளிவான ஒன்றை செய்தார். அதுதான் "நோ விளம்பரம் ஒன்லி இலவசம்" என்கின்ற கொள்கை. அதன்படி இன்று வரை விக்கி பீடியா பக்கத்தில் விளம்பரங்களின் மொய்ப்பு இல்லை. யார் வேண்டுமானாலும் இலவசமாக பார்வையிடலாம். ஆனாலும், இது மக்கள் தளம் என்று மறுத்து விட்டார் விளம்பரங்களை ஜிம்மி. கூகுள், பேஸ்புக், டுவிட்டர், யாகூவிற்கு அடுத்தபடியாக பல கோடிக்கும் மேலான மக்கள் இன்று விக்கி பீடியாவினை உபயோகித்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே ஜிம்மி:

ஹேப்பி பர்த்டே ஜிம்மி:

அவர் நினைத்திருந்தால் பில்லியன், ட்ரில்லியனில் சொத்து குவிந்திருக்கும்...ஆனாலும், ஜிம்மி பல லட்சங்களுக்கு மட்டுமே இன்றும் அதிபதி. காரணம் அவர் மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதை மட்டுமே விரும்பினார்...சொத்து சேர்ப்பதை அல்ல...அந்த எளிய மனிதருக்கு ஒன் இந்தியாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Jimmy Donal "Jimbo" Wales is an American Internet entrepreneur best known as the co-founder and promoter of the online non-profit encyclopedia Wikipedia and the for-profit Wikia web hosting company. his birthday celebrating today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more