For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹுஸ்டனில் திருக்குறள் போட்டி...வெற்றி பெற்றவர்கள் அன்னையர் தினத்தில் கெளரவிப்பு

Google Oneindia Tamil News

ஹுஸ்டன் : தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனத்தின் ஹுஸ்டன் கிளை, ஏப்ரல் மாதம் 10, பதினொன்றாம் நாட்களில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தியது. உலகில் பல மனிதர்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனனா நோய்த்தொற்றின் காரணமாக, இந்த ஆண்டு கணினி செயலியின் வாயிலாக ஷும் நேரலையில் திருக்குறள் போட்டி நடைபெற்றது.

இந்த ஆண்டு போட்டியில் நான்று வயதிலிருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இருபத்தியொன்று மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கு பெற்றவர்களின் வயதிற்கேற்ப, நான்று போட்டி நிலைகள் ( மழலை, நிலை ஒன்று, நிலை இரண்டு, நிலை நான்கு) அமைத்து போட்டி நடத்தப்பட்டது.

கூடுதல் மதிப்பெண்கள்

கூடுதல் மதிப்பெண்கள்

மழலை, நிலை ஒன்று போட்டியாளர்களுக்கு, ஒப்புவித்த திருக்குறளுக்கு தமிழில் பொருள் சொன்னால், கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இது போன்று, நிலை இரண்டு, நிலை நான்று போட்டியாளர்களுக்கு, குறள் எண், அதிகாரம் பெயர் சொல்லி, தமிழ் பொருளுடன் வரிசைப்படுத்தி ஒப்புவித்தால், கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

 முதல் நிலை வெற்றாயாளர்கள்

முதல் நிலை வெற்றாயாளர்கள்

இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் குறுகிய நேரத்தில் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கடினமாக உழைத்து ஆயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி ஒன்று திருக்குறள்களை ஒப்புவித்தனர். நடுவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களின் வரிசை : (1) வித்யா கந்தசாமி (2) அதிதி அரவிந்த் (3) வாணி கந்தசாமி (4) ஆதிசுதன் மைனர் வெள்ளைப்பாண்டி (5) இஷாஜோதி பிரபாகரன்.

குறளொன்றுக்கு ஒரு டாலர்

குறளொன்றுக்கு ஒரு டாலர்

கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்களை ஊக்குவிக்க, " குறளொன்றுக்கு ஒரு டாலர்" என்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹுஸ்டன் நிறுவனம் நரிசளித்து வந்தது. இந்த ஆண்டில் இந்த பரிசுடன், மாணவர்களை மென் மேலும் ஊக்குவிப்பதற்காக, ஹுஸ்டன் கிளை நிறுவனத்தின் தலைவி திருமதி.மாலா கோபால், ஒவ்வொரு நிலையிலும் முதலாவதாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்னையர் தினத்தில் கெளரவிப்பு

அன்னையர் தினத்தில் கெளரவிப்பு

வெற்றி பெற்ற மாணவர்களின் வரிசை : (1) சாய் பாலகிருஷ் சங்கர்ஜி (மழலை) (2) ஆதிசுதன் மைனர் வெள்ளைப்பாண்டி (நிலை ஒன்று) (3) வித்யா கந்தசாமி (நிலை இரண்டு) (4) இஷாஜோதி பிரபாகரன் (நிலை நான்கு)

திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனம் மே மாதம் இரண்டாம் தேதியன்று நடக்கவிருக்கும் " அன்னையர் தின" நிகழ்ச்சியில் கெளரவித்து பரிசளிக்க இருக்கிறது.

நடுவர்களுக்கு பாராட்டும், நன்றியும்

நடுவர்களுக்கு பாராட்டும், நன்றியும்

நடுவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டனர். தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனம், திருக்குறள் போட்டி நடுவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹுஸ்டன் நிர்வாக குழுவும், தன்னார்வலர்களும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாவார்கள். குறிப்பாக, திரு.குமரன் சிவப்பிரகாசம், திருமதி. மலர் நாராயணன், திரு.சோலையப்பா சொக்கலிங்கம் மற்றம் திரு.தங்கராஜ் பேச்சியப்பன் முன்னிருந்து இந்த திருக்குறள் போட்டியை பக்குவமாக நடத்தினார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

English summary
Winners of Thirukural competetion in Houston to be honoured on May 2nd
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X