6 வருஷமா ‘வீகன்’ உணவுகளை மட்டுமே சாப்பிட்ட இன்ஸ்டா பிரபலம்.. உடல் மெலிந்து.. நோய்வாய்ப்பட்டு பலி
மாஸ்கோ: தண்ணீர், இறைச்சி, சோறு, சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு பதிலாக வெறும் பழங்களையும், பழச்சாறுகளையும் மட்டும் சாப்பிட்டு வந்த 'வீகன்' இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக 39 வயதில் உயிரிழந்துள்ளார்.
நம்மை சுற்றி இருக்கும் எந்த பொருளும் ஒரேயொரு மூலப்பொருட்களால் ஆனது கிடையாது. எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு பொருள் கலந்துதான் இருக்கும். இயற்கையிலேயே பல மூலக்கூறுகள் கலந்துதான் பொருட்கள் உருவாகின்றன. அப்படி இருக்கையில் நாம் உயிர்வாழ சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது போதுமானதா? என்கிற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. காலங்காலமாக பலர் வெறும் சைவம் மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல சிலர் இரண்டையும் கலந்து சாப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் சமைக்காத வெறும் சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வந்த பெண்மணி ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த ஜன்னா சாம்சோனோவா எனும் பெண்மணிதான் அவர். இன்ஸ்டாகிராமில் ஜன்னா டி'ஆர்ட் எனும் பெயரில் செயல்பட்டு வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக இவர் இதுவரை தண்ணீரை குடித்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது. உடலின் நீர் தேவையை பூர்த்தி செய்ய அவர் பழச்சாறுகளை எடுத்துக்கொண்டுள்ளார்.
அதேபோல வேகவைக்காத பச்சை காய்கறி, பழங்களையே இவர் சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது நண்பர்கள் கூறியதாவது, "இவளுடைய கண்கள் அவ்வளவு பிரகாசமாக இருக்கும். முடியும் நல்ல நீளமாக இருக்கும். ஆனால் எலும்பும் தோலுமாய் இருந்த தனது உடலை பராமரிக்காமல் அவல் இருந்ததற்கான காரணமும் இதுதான். கண்களும், முடியும் மட்டுமே அழகு என்று நம்பிக்கொண்டிருந்தார்.
அவர் நோய்வாய்ப்படும்போது மருத்துவர்களை அணுக சொல்வேன். ஆனால் எங்கள் பேச்சை அவள் கேட்கவே மாட்டாள். மருத்துவர்கள் பழங்களைதான் சாப்பிட சொல்வார்கள். எனவே நான் பழங்களையே சாப்பிட்டுக்கொள்கிறேன் என அநியாயத்திற்கு டயட் மெயின்டெயின் செய்து வந்தாள். தானியங்கள், கீரைகள், அரிசி உள்ளிட்ட பொருட்களால் ஆன எதையும் அவள் சாப்பிட்டு நான் பார்த்ததே கிடையாது. கடைசியில் இப்போது அவள் இறந்துவிட்டாள்" என்று கூறியுள்ளார்.
அதேபோல ஜன்னா டி'ஆர்ட்டின் தாய் கூறுகையில், "எனது மகள் கடைசியாக உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்தோம். ஆனால் அவள் ஒத்துழைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவளால் நடக்க கூட முடியாமல் போனது. இந்நிலையில் காலரா போன்ற தொற்று நோய்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
இந்த இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. இவரது மரணம் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications