For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாட்ஸ் அப்பில் அவதூறு தகவல் அனுப்பிய சவுதி பெண்... தண்டனை 70 சவுக்கடி!

Google Oneindia Tamil News

மனாமா: வாட்ஸ் அப்பில் இளைஞர் ஒருவர் குறித்து அவதூறு பரப்பியதற்காக சவுதி அரேபியாவில் பெண் ஒருவருக்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும்.

இந்நிலையில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் வாட்ஸ் அப் மூலமாக இளைஞர் ஒருவரைக் குறித்து அவதூறான தகவலைப் பரப்பினார். தகவலறிந்த இளைஞர், இது தொடர்பாக அப்பெண் மீது போலீசில் புகார் அளித்தார்.

Woman sentenced to 70 lashes for insulting Saudi man on WhatsApp

புகாரின் அடிப்படையில் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் அப்பெண்ணுக்கு ரூ. 3 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், அந்த தண்டனையை பாதிக்கப்பட்ட இளைஞர் ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்பெண்ணால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என வாதாடிய அந்த இளைஞர், மேலும் கடுமையான தண்டனை வழங்கும் படி கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
A 32-year-old woman has been sentenced to 70 lashes by a court in Saudi for defaming a man on an instant messaging app.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X