For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஆண்கள் எல்லாம் வேண்டாம்!" ஆனால் ஒரே படுக்கையில் ஐம்பதாம்.. அடேங்கப்பா யாருடா இந்த பொண்ணு!

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனி நாட்டில் பெண் ஒருவரின் காதல் கதை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.

காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகக் கூறுவார்கள். இந்த உலகத்தில் யாருக்கு யார் மீது எப்போது காதல் வரும் என யாராலும் சொல்ல முடியாது.

அதேபோன்ற வினோத சம்பவம் ஒன்று தான் ஜெர்மனி நாட்டில் நாட்டில் நடந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் நெட்டிசன்கள் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

 குஜராத்

குஜராத்

சமீபத்தில் கூட குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற இளம்பெண், பல்வேறு எதிர்ப்புகளை மீறி தன்னை தானே நேற்றைய திருமணம் செய்து கொண்டார். 'சோலோகமி' என்ற முறையில் இந்தப் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இதுபோன்ற செயல்களால் இந்துக்களின் மக்கள்தொகை குறையும் என இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அதைத் தாண்டி இப்பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

 ஜெர்மனி

ஜெர்மனி

இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் முதல்முறை என்றாலும் வெளிநாடுகளில் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் பொருள்கள் மீது பாலியல் ரீதியாக ஈர்க்கப்படுவதாக இளம் பெண் ஒருவர் தான் தெரிவித்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண் சாரா ரோடோ. இந்தப் பெண்ணை தன்னை 'ஆப்ஜெக்டம் செக்சுவல்' (Objectum Sexual) என்று சொல்லிக் கொள்கிறார். அதாவது மனிதர்களைக் காட்டிலும், உயிரற்ற பொருட்கள் மீது தான் இந்தப் பெண் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படுகிறார்.

 படுக்கையில் 50 விமானங்கள்

படுக்கையில் 50 விமானங்கள்

அதிலும் குறிப்பாகப் பயணிகள் விமானத்தின் மீது அதீத காதலை உணர்வதாக அப்பெண் தெரிவித்தார். ஜெர்மனியின் டார்ட்மண்டைச் சேர்ந்த சாரா, மனிதர்களுடன் இருப்பது தனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் கூட விமானங்கள் உடன் இருப்பதே தன்னை முழுமையாக்குவதாக தெரிவித்துள்ளார். அவரது படுக்கையில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட மினி விமானங்கள் பொம்மைகளை வைத்துள்ளார்.

டிக்கி

டிக்கி

மேலும், விமானத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அப்பெண் அடிக்கடி விமானத்தில் செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். சாரா தனது ஓய்வு நேரத்தை விமானத்தைக் கண்டறிவதிலேயே செலவிடுகிறார். கைகள் முழுவதிலும் விமானத்தின் படங்களைப் பச்சை குத்திக் கொண்டு இருக்கிறார். மேலும் 'டிக்கி' என்று பெயரிடப்பட்ட போயிங் 737ஐ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

 14 வயது

14 வயது

இருப்பினும், ஜெர்மனி நாட்டின் சட்டப்படி உயிரற்ற பொருட்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமானதாகும். இது குறித்து அப்பெண் கூறுகையில், "எனக்கு டீனேஜ் பருவத்திலிருந்தே ஆண்களைக் காட்டிலும் பொருள்கள் மீது ஈர்ப்பு இருந்தது. நான் 14 வயதில் அதை முதலில் கவனித்தேன். விமானத்திற்கு முன்பு, எனக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது ஈர்ப்பு இருந்தது. எனக்கு உண்மையில் யார் மீது ஈர்ப்பு உள்ளது என்பதைக் கண்டறிய இரு ஆண்களுடன் உறவில் இருந்தேன். இருப்பினும், அவர்கள் மீது எனக்குக் காதல் வரவில்லை என்பதை நான் விரைவில் உணர்ந்தேன்.

 ஆப்ஜெக்டோபிலியா

ஆப்ஜெக்டோபிலியா

இப்போது எனது பாலுறவு ஆப்ஜெக்டோபிலியா (பொருட்கள் மீதான காதல்) என்று எனக்குத் தெரியும். இதில் நான் உறுதியாக உள்ளேன். நெருக்கமாக இருப்பது கூட பொருட்கள் உடன் இருக்கும் போது தான் எனக்கு முழு திருப்தி கிடைக்கிறது. 'டிக்கி' விமானத்துடன் தான் எப்போதும் நான் தூங்குவேன். அதைத் திருமணம் செய்து கொள்வதே எனது விருப்பம். டிக்கி விமானம் என்றால் எனக்கு உயிர். குறிப்பாக அதன் முகம், இறக்கைகள் மற்றும் இயந்திரம் எனக்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றன" என்றார்.

 ரயன்ஏர்

ரயன்ஏர்

இப்பெண் குறிப்பிடும் டிக் விமானம் ரயன்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமானது ஆகும். கூடியவரை அந்த விமானத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக ஐரோப்பா முழுவதும் சரியாக, அந்த விமானத்தில் பயணிக்கும்படி இவர் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கிறார். மேலும், டிக்கி விமானத்தின் சிறிய மாதிரியையும் அவர் தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார்.

English summary
A young woman who is sexually attracted to objects has announced she's in a relationship with a plane: (விமானத்துடன் காதல் கொண்ட ஜெர்மனி பெண்) Sarah Rodo identifies as an 'Objectum Sexual,' which means that she is sexually attracted to inanimate objects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X