For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக கொரோனா.. பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பெரும் மாற்றம்.. உலக நாடுகள் கவலை

Google Oneindia Tamil News

ஜெனிவா: உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டிருந்த ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, அர்ஜெண்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இடம் பெற்றிருப்பது உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை ஆரம்பம் ஆகி உள்ளது. ஆனால் இதுவரை சரியான மருந்தை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் மொத்த உலகமும் திணறி வருகிறது.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 3,77,35,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 10,81,246 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,83,42,310 பேர் மீண்டுள்ளனர். உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 83,12,129 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,991,564 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,119,300 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,094,979 ஆக உள்ளது. ரஷ்யாவில் 1,298,718 பேரும், கொலம்பியாவில் 911,316 பேரும், அர்ஜெண்டினாவில் 894,206 பேரும், ஸ்பெயினில் 890,367 பேரும், பெருவில் 849,371 பேரும், மெக்ஸிகோவில் 814,328 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 நாடுகள் விவரம்

10 நாடுகள் விவரம்

உலகில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 67,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 41,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 16,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 13,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 12872 பேரும், அர்ஜெண்டினாவில் 10324 பேரும், கொலம்பியாவில் 8569 பேரும், பெல்ஜியத்தில் 7950 பேரும், நெதர்லாந்தில் 6373 பேரும், இத்தாலியில் 5456 பேரும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 நாடுகளில் மரணம்

10 நாடுகளில் மரணம்

ஒரு நாளில் அதிகபட்ச மரணம் நிகழ்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 813 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 325 பேரும்,. அர்ஜெண்டினாவில் 287 பேரும், பிரேசிலில் 270 பேரும், ஈரானில் 251 பேரும், கொலம்பியாவில் 174 பேரும், ரஷ்யாவில் 143 பேரும், மெக்ஸிகோவில் 135 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 107 பேரும், உக்ரைனில் 85 பேரும் பலியாகி உள்ளனர்.

அதிக மரணம்

அதிக மரணம்

உலகிலேயே கொரோனா தொற்றால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 219,695 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 150,506 பேரும், இந்தியாவில் 109,184 பேரும், மெக்ஸிகோவில் 83642 பேரும், இங்கிலாந்தில் 42825 பேரும், இத்தாலியில் 36166 பேரும், பெருவில் 33305 பேரும், ஸ்பெயினில் 32929 பேரும், பிரான்ஸில் 32683 பேரும், ஈரானில் 28544 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

English summary
World Corona: big change in the list of affected countries, World countries concerned
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X